இம்மாதம் வெளியாக இருக்கும் படங்களின் விபரங்கள்

Movie
Spread the love

1. 96

ஜுங்கா திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வரவிருக்கும் படம் தான் 96. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரால் இயக்கப்பட்ட இப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் ஜனகராஜ், S. ஜானகி, காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், ஷ்யாம் பிரசாத், விஷ்னு பிரசாத் மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்க கொவிந் மேனன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மஹேந்திரன் ஜெயராஜு செய்ய படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் R.கோவிந்தராஜ். இப்படம் இம்மாதம் 13 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. சீமராஜா

சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பொன்ராம், D. இமான் ஆகியோரின் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் தான் சீமராஜா. அதிரடி, நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தை பொன்ராம் இயக்க R.D ராஜா தயாரித்துள்ளார். கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளதோடு நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகிபாபு, K.S ரவிகுமார், லால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மற்ற துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு D. இமான் இசை வழங்கியுள்ளார். படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் செய்துள்ளார். ஒளிப்பதிவு செய்துள்ளார் பால சுப்ரமணியம். T. முத்துராஜ் அவர்கள் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இம்மாதம் 13 ஆம் திகதி இப்படம் திரைக்கு வருமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

3. யூ டர்ன்

இது ஒரு த்ரில்லர் படமாகும். BR8 கிரியேஷன்ஸ், V.Y கொம்பைன்ஸ், ஸ்ரீநிவாச சில்வர் ஸ்க்ரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பதோடு படத்தை இயக்கியுள்ளார் பவண் குமார். ஆதி பினிசெட்டி, சமந்தா, பூமிகா சௌலா மற்றும் ராஹுல் ரவிந்திரன் ஆகியோர் நடிக்க படத்திற்கு இசையமைத்துள்ளார் பூர்ணா சந்திர தேஜாஸ்வி. சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளதோடு நிகேத் பூமிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் அடுத்த மாதம் 13 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.

4. சாமி ஸ்கொயார்

2003 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளது சாமி ஸ்கொயார். இரட்டை வேடத்தில் நடித்துள்ள விக்ரமிற்கு ஜோடி சேர்கிறார்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ். இது விக்ரம், ஹரி ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமாகும். இயந்குநர் ஹரி இயக்க தமீன்ஸ் பிலிம் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். பிரபு, பாபி சிம்ஹா, சூரி, இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ், சுமித்ரா, உமா ரியாஷ் கான் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ப்ரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வது V.T விஜயன் மற்றும் T.S ஜெய் ஆகியோர் ஆகும்.

5. செக்க சிவந்த வானம்

இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படைப்பாக உருவாகிக்கொண்டிருக்கிறது செக்க சிவந்த வானம். இது ஒரு ஆக்ஷன், த்ரில்லர் படமாகும். இதில் முன்னணி கதாபாத்திரங்களில் அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி மற்றும் டயானா ஏரப்பா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இசைப்புயல் A.R ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவம் செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் இம்மாதம் 28 ஆம் திகதி திரையிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

6. என்னை நோக்கி பாயும் தோட்டா

முதன் முறையாக இயந்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும் M. சசிகுமார், சுணைனா, ரானா தாகுபாடி, அனுஷ்கா ஷர்மா (கோலியின் மனைவி) ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தை கௌதம் மேனனுடன் இணைந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ப்ரவீன் அந்தோனி படத்தொகுப்பு செய்கிறார். ஜோமோன் T. ஜோன் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *