நடிகர் சூர்யாவின் வரவிருக்கும் திரைப்படங்கள்

Movie
Spread the love

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் தான் நந்த கோபாலன் குமரன். சுருக்கமாக NGK என்று அழைக்கிறார்கள். இது சூர்யாவின் 36 வது திரைப்படமாகும். இதில் முன்னணி நடிகைகளான சாய்பல்லவி மற்றும் ராகுல் ப்ரீட் சிங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் (Dream Warrior pictures) என்ற நிறுவனம் தயாரிக்க யுவண் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பு திறமையை பார்த்து வியந்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். மீண்டும் ஒரு நடிகருடன் பணியாற்ற விரும்பினால் அது நடிகர் சூர்யாவுடன் தான் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது நடிப்பை பார்த்து வியந்ததாகவும் அதற்கு அவரது விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படம் தீபாவளிக்கு திரையிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இயக்குநர் செல்வராகவன் சுகயீனமுற்று இருந்த காரணத்தால் படபிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தற்போது படம் வெளியாகும் திகதி பிற்போடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு படத்தை வெளியிடமுடியாமைக்காக வருந்துவதாகவும் வெளியிடப்படும் திததி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



அடுத்து நடிகர் சூர்யா அவரது 37 வது திரைப்படமாக இயக்குநர் K.V ஆனந்தின் இயக்கத்தில் நடிக்கிறார். இது அதிரடி த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இன்னும் இத்திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. அதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இத்திரைப்படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் மோகன்லால், நடிகர் ஆர்யா, நடிகை சாய்ஷா, பொலிவுட் (Bollywood) நடிகரான போமன் இரானி (Boman Irani), நடிகர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் பிரேம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நடிகர் ஆர்யாவின் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் நடிக்க இருந்தார். இருந்தபொழுதிலும் அவர் வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருப்பதால் நேரம் போதாமை காரணமாக இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் (Lyca Productions) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தொகுப்பு செய்கிறார் அந்தோனி (Anthony). இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜேயராஜ். மேலும் நிவ்யோர்க், பிரேசில், புதுடெல்லி மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படபிடிப்புகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். அடுத்த வருடம் இத்திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.



இதனை அடுத்து இறுதி சுற்று என்ற திரைப்படத்தை இயக்கிய சுதா கோங்கராவின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இயக்குநர் கூறிய கதை தனக்கு மிகவும் பிடித்துள்ளது என தெரிவித்துள்ள சூர்யா தானே தயாரிப்பதாகவும் கூறியுள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) என்கிற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கவுள்ளார். இவரது 38 வது படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. இதற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே இப்படத்திற்கு இசையமைப்பு பணிகளை ஆரம்பித்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *