வெளியானது அனைவரும் எதிர்பார்த்த பிகில் ட்ரெய்லர்

Tamil
Spread the love

தளபதி விஜயின் பிகில் திரைப்பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளதோடு AGS Entertainment கம்பனி சார்பில் கலைப்புலி S. அகோரம், கலைப்புலி S. கணேஷ், கலைப்புலி S. சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் ஜேக்கி ஸ்ரோஃப், விவேக், கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

படத்திற்கு இசை வழங்கியுள்ளார் இசைப்புயல் A.R ரஹ்மான் அவர்கள். படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் G.K விஷ்ணு. ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.பெண்கள் காற்பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில் ட்ரெய்லரில் ராயப்பன், மைக்கல், பிகில் என விஜய் 3 பெயர்களை குறிப்பிடுகிறார். ஆகவே விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளாரா என்று நினைக்கத்தோன்றுகிறது. ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் நான்கு இலட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் முறைகளுக்கு அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது. சண்டை காட்சிகளும் காற்பந்தாட்ட காட்சிகளும் ட்ரெய்லரில் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் விஜயின் மாஸான நடிப்பு நன்கு வெளிப்பட்டுள்ளது.இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 140 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ள இப்படமானது தீபாவளிக்கு திரைக்கு வருமென குறிப்பிடப்பட்டுள்ளது.

படக்குழுவினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *