வெளிவந்தது சூப்பர்ஸ்டாரின் தர்பார் ட்ரெய்லர்

Tamil
Spread the love

சூப்பர்ஸ்டாரின் 167 வது திரைப்படமாக உருவாகியுள்ளது தர்பார். இப்படத்தை இயக்குநர் A.R முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் சார்பில் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தயாரித்துள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தோமஸ், யோகி பாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க: சூப்பர்ஸ்டாரின் தர்பார் பற்றிய முழு விபரம்

இப்படத்தில் ரஜினி அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் 27 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறார். அதனால் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் வில்லனாக சுனில் ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் 12பீ (12B) படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்.



இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2 மணித்தியாலத்திற்கு முன்பு இப்படத்தின் ட்ரெயலர் வெளியாகியிருந்தது. தமிழ் மொழியில் வெளியாகியுள்ள ட்ரெய்லர் இரண்டு மணித்தியாலயத்தில் 465K முறை பார்க்கப்பட்டுள்ளதோடுளதோடு 356K லைக்களையும் பெற்றுள்ளது.

ஹிந்தி ட்ரெய்லர் ஒரு மணித்தியாலயத்தில் 410K வீவ்களையும் தெலுங்கு ட்ரெய்லர் 474K வீவ்களையும் பெற்றுள்ளது.

ட்ரெய்லரில் ரஜினி தான் எப்போதும் மாஸ் ஹீரோ என மீண்டும் நிரூபித்துள்ளார். மும்பையை சேர்ந்த போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

“என்னா பாக்குற ஒரிஜினலாவே நா வில்லேம்மா இதெப்படி இருக்கு, அயம் அ பேட் கோப்” என்கிற வசனங்கள் எல்லாமே மிரள வைக்கின்றன.

மொத்தத்தில் ட்ரெலர் வெறித்தனமாக உள்ளது. படக்குழுவினருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *