ரவுடி பேபியின் புதிய சாதனைகள்

Song
Spread the love

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மாரி 2 படம் வெளியானது. பாலாஜி மோகன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் அவரே தயாரித்து நடித்திருந்தார். கதாநாயகியாக சாய்பல்லவியும் கிருஷ்ணா, வரலக்ஷ்மி, ரொபோ சங்கர் உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். யுவண் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் ரவுடி பேபி பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் ஈர்க்கப்பட்ட பாடலாக மாறிவிட்டது. இவ்வருடம் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி யூடியுப்பில் வெளியான இப்பாடல் இதுவரை 651 மில்லியன் அதாவது 65 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதுவரை வெளியான தமிழ் பாடல்களில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில் 9 வது இடத்தில் உள்ளது. உலகில் இவ்வருடம் வெளியான பாடல்களில் அதிகமாக பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.



இதன் பாடல் வரிகளை மாத்திரம் கொண்ட வீடியோ 85 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தெலுங்கு மொழியில் இப்பாடல் யூடியுப்பில் வெளியாகியிருந்தது. இதுவரை 24 மில்லியனிற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரவுடி பேபி மேகிங் (Making) வீடியோவானது 13 மில்லியனையும் தாண்டியுள்ளது.

இப்பாடலுக்கு நடிகர் பிரபு தேவா அவர்கள் நடனப்பயிற்சியை வழங்கியுள்ளார். வித்தியாசமான நடன அசைவுகளை கொண்ட இந்த பாடலில் ஆடிய சாய்பல்லவியின் திறமை நன்கு வெளிகாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் மேலும் பிரபலமானதோடு இளைஞர்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

இப்பாடலை தனுஷுடன் இணைந்து தீ என்று அழைக்கப்படும் தீக்ஷிதா வெங்கடேஷன் பாடியுள்ளார். பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.



இப்பாடலின் உருவாக்கத்திற்காக உழைத்த அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *