பொன் மாணிக்கவேல் உத்தியோகபூர்வ ட்ரெய்லர் வெளியானது

Tamil
Spread the love

பிரபுதேவாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ளது பொன் மாணிக்கவேல். A.C முகில் செல்லப்பனால் இயக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஜபாக் மூவீஸ் (Jhabak Movies) தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் பிரபுதேவா, நிவேதா பெதுராஜ், சூரி, சுரேஸ் சந்திர மேனன், J. மஹெந்திரன், பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.



பிரபுதேவா தனது சினிமா வாழ்க்கையில் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் வாசிக்க:

இது ஆக்ஷன் நிறைந்த ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார் K.G வெங்கடேஷ். படத்தொகுப்பு பணிகளை T. ஷிவனந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

D.இமான் அவர்கள் பிரபுதேவாவுடன் முதன் முதலாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ட்ரெய்லரை பார்க்கும் போது முற்றிலும் விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது போல தோன்றுகிறது. சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு படமாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு காட்சியும் பரபரப்பாக அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.




ட்ரெய்லர் வெளியாகி 3 மணிநேரத்தில் 169K வீவ்ஸ்களையும் 20K லைக்களையும் பெற்றுள்ளது.

முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரபுதேவா அவர்களுக்கு இப்படம் தனது பட வரிசையில் விசேட இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

படக்குழுவினருக்கும் எமது வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *