தளபதி 64 பற்றிய முதன்மையான விபரங்கள்

Movie
Spread the love

பிகில் படத்திற்கு பிறகு விஜய் தனது 64 வது திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை “கைதி” திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கணகராஜ் இயக்கிக்கொண்டிருக்கிறார். தனது 3 வது படத்தை இயக்கும் இவர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றும் 1 வது திரைப்படமாகும்.

எக்ஸ்பீ ஃபில்ம் கிரியேட்டர்ஸ் (XB Film Creators) சார்பில் சேவியர் பிரிட்டோ (Xavier Britto) இப்படத்தை தயாரிக்கிறார். இக்கம்பனி தயாரிக்கும் 1 வது திரைப்படம் இது என்பது கண்டிப்பாக குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

நடிகர்கள்

  • விஜய்
  • விஜய் சேதுபதி
  • சாந்தனு பாக்கியராஜ்
  • ஆண்டனி வர்கீஸ்
  • மாளவிகா மோகனன்
  • ஆண்ட்ரியா ஜெரேமியா
  • ஸ்ரீ்மன்
  • சஞ்சீவ்
  • ஸ்ரீ்நாத்
  • ரம்யா சுப்ரமணியம்
  • அழகம் பெருமாள்
  • கௌரி கிஷான்
  • லிண்டு ரொனி

மேலும் படிக்க:

இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி பட பூஜையுடன் பணிகள் ஆரம்பமாகின. அதே தினத்தன்று பிரதானமான புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.



லோகேஷ் கணகராஜுடன் இணைந்து ரத்ண குமார் படத்திற்கான திரைக்கதை எழுதுகிறார். ரத்ண குமார் வெற்றிப்படமான “ஆடை” திரைப்படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூர்யன் மேற்கொள்கிறார். ஃபிலொமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய கலை இயக்குநராக சதீஸ் குமார் தொழிற்படுகிறார்.

பல்லவி சிங் என்பவர் ஆடை வடிவமைப்பு செய்கிறார். சண்டை பயிற்சி அளிப்பது ஸ்டண்ட் சில்வா ஆகும்.

படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய்யுடன் இணையும் 2 வது திரைப்படம் இதுவாகும். சோனி மியுசிக் இந்தியா பாடல்களை வெளியிடவுள்ளது.

தற்போது டில்லியில் படப்பிடிப்புகள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் படப்பிடிப்பு நிகழும் இடத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்புகளை முடிக்கும் நோக்கத்தில் படக்குழுவினர் மும்முரமாக செயற்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் ஒரு கல்லூரியின் பிண்ணனியை வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் ஒரு பேராசிரியராக மாணவர்களுக்கு எதிராக நிகழும் ஊழலை எதிர்த்து போராடுபவராகவும் நடிக்கிறார் என இணையத்தில் கருத்துக்கள் பலவிதமாக பரவி வருகின்றன. எனினும் உத்தியோகபூர்வமாக எந்த விளக்கமும் இன்னும் அளிக்கப்படவில்லை.

இப்படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளது. எனினும் நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படமும் அதே மாதம் வெளியிட இருப்பதால் 2 படங்களுக்குமிடையே கடும் போட்டி நிகழும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
படக்குழுவினருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *