வெளியானது சங்கத்தமிழன் ட்ரெய்லர்

Tamil
Spread the love

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சங்கத்தமிழன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெதுராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் சூரி, நாசர், ஜோன் விஜய் போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ளதோடு விஜயா புரோடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசை வழங்கியுள்ளார்கள் விவேக் மற்றும் மேர்வின். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளதோடு K.L பிரவீன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.



இத்திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள போதிலும் ட்ரெய்லரை பார்க்கையில் அரசியல் சார்ந்த பிண்ணனியை கொண்டுள்ளது போல தெரிகிறது. கிராமத்து கதைகளத்தை கொண்டுள்ளதோடு விஜய் சேதுபதியின் மாஸான நடிப்பு வெளிப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியாகி 2 மணித்தியாளத்தில் இரண்டரை இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளதோடு முப்பதாயிரம் லைக்களையும் பெற்றுள்ளது.

இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருவதாக ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் திகதி குறிப்பிடப்படவில்லை. படக்குழுவினருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *