வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று டீசர்

Tamil
Spread the love

இறுதி சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருகிறது சூரரைப் போற்று. 2D Entertainment மற்றும் Sikhya Entertainment ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

எயார் டெகான் நிறுவுனரும், ஓய்வுபெற்ற இந்திய இராணுவ தலைவருமாகிய கெப்டன் ஜீஆர் கோபிநாத் என்பவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சூர்யா, ஜேக்கி ஸ்ரோஃப், அபர்ணா பாலமுரளி மற்றும் கருணாஸ் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.




இப்படத்திற்கு G.V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சதிஷ் சூரியா படத்தொகுப்பு செய்கிறார். மேலும் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார்.

இப்படத்தின் டீசர் இன்று 5.00 மணிக்கு வெளியாகியிருந்தது. வெளியாகிய நான்கு மணிநேரத்தில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட வீவ்ஸ்களையும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

டீசரைப் பார்க்கும் போது ஒரு வெறித்தனமான, வித்தியாசமான நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பிலேயே திரைக்கதை நகர்ந்துபோகும்படி இப்படம் அமையும் என்பதில் எந்த ஐயம் இல்லை.

தனது இலக்கை அடைய முழுமையாக போராடும் ஒருவரின் உணர்வை சூர்யா நன்கு வெளிக்காட்டியுள்ளார். கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என்று நிச்சயாக கூறமுடியும்.

படக்குழுவினருக்கு எமது மனமார்ந்த் வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *