சித்திரை புதுவருடத்திற்கு வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள்

Movie
Spread the love

கீ

இப்படம் ஒரு அறிவியல் கதையை கொண்ட உளரீதியான த்ரில்லர் படமாகும். S. மைக்கல் ராயப்பன் அவர்களால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் கலீஸ் இயக்கியிருக்கிறார். ஜீவா, கோவிந் பத்மசூர்யா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, RJ பாலாஜி, சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் மற்றும் மேலும் பலர் நடித்துள்ளார்கள். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசை வழங்கியுள்ளார். அபினந்தன் ராமானுஜம் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு திரையிடப்படவுள்ளது.

தேவி 2

இது ஒரு திகில் கலந்த நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை A.L விஜய் அவர்கள் இயக்கியுள்ளார். பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா, RJ பாலாஜி, யோகிபாபு, சதிஸ், நாசர் மேலும் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சேம் C.S இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அனில் மேஹ்தா மேற்கொண்டிருப்பதோடு ஆண்டனி அவர்கள் படத்தொகுப்பு செய்துள்ளார். GV ஃபிலிம்ஸ் (GV Films) மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் (Trident Arts) ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.

வாட்ச்மேன்

இது ஒரு த்ரில்லர் படமாகும். A.L விஜய் இயக்கியுள்ள இப்படத்தை அருண் மொழி மாணிக்கம் என்பவர் தயாரித்திருக்கிறார். G.V பிரகாஷ்குமார், அவரே இசையும் வழங்கியுள்ளார். நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

கெங்ஸ் ஆப் மெட்ராஸ் (Gangs of Madras)

C.V குமார் தயாரித்து அவரே இப்படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு ஆக்ஷன் படமாக வெளிவரவுள்ளது. இப்படத்தில் கலையரசன், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஹரி டபியுசியா மற்றும் ஷ்யாமலங்கன் என்பவர்கள் இசையமைத்துள்ளார்கள். கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *