இதுவரை இந்திய தமிழ் சினிமாவில் அதிக வசூல் சாதனை படைத்த முதல் 5 படங்களும் அவற்றின் விபரங்களும்

Movie
Spread the love

பாகுபலி 2த கொன்க்லூசன் (The Conclusion)

இந்திய தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூலை பெற்ற முதல் படம் இதுதான். இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 1790 கோடி வசூலை பெற்றது. இப்படத்தை S.S ராஜமௌலி இயக்க இதற்கு அவரது தந்தையான K.V விஜேந்திர பிரசாத் அவர்கள் கதை எழுதியுள்ளார். இது ஒரு காவிய, கற்பனை, அதிரடி திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான பிரபாஸ், ராணா தாகுபாடி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்ய கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அர்கா மீடியா வர்க்ஸ் (Arka Media Works) சார்பில் ஷோபு யார்லகத்தா மற்றும் பிரசாத் தெவினெனி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசை வழங்கியுள்ளார் M.M கீரவாணி. ஒளிப்பதிவு K.K செந்தில் குமார் செய்ய, படத்தொகுப்பு செய்துள்ளார் கோடாகிரி வெங்கடேஷ்வர ராவோ. இதற்கு பீட்டர் ஹெய்ன் சண்டைபயிற்சி வழங்கியுள்ளதோடு சாபு சிரில் அவர்கள் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வெளியான இப்படம் 250 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

பாகுபலித பிகினிங் (The Beginning)

இத்திரைப்படம் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 180 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 650 கோடி ரூபாய் வசூல் படைத்தது.எந்திரன்

அறிவியல் சார்ந்த கதையாக அமைந்த இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கினார். இது 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இப்படம் 290 கோடி ரூபாய் வசூல் செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு டேனி டென்சோங்பா, சந்தானம், கருணாஸ் மற்றும் மேலும் பலர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு A.R ரகுமான் இசையமைக்க மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் உரிமையாளரான கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பணிகளை முறையே R. ரத்னவேலு, அந்தோணி ஆகியோர் கையாண்டுள்ளனர். சாபு சிரில் கலை இயக்குநராக தன் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரொபோ சார்ந்த அலங்காரம் மற்றும் அனிமெட்ரோனிக்ஸ் பணிகளுக்கு அமெரிக்காவின் லெகசி எபெக்ட்ஸ் ஸ்டூடியோ (Legacy Effects Studio) பொறுப்பாக இருந்தது. இந்த ஸ்டூடியோ இந்திய சினிமாவிலேயே இப்படத்திற்கே முதன் முறையாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. V. ஸ்ரீநிவாஸ் மோகன் அவர்கள் விசுவல் எபெக்ட்ஸ் வழங்கியுள்ளார்.

கபாலி

கலைப்புலி S.தானு அவர்களின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம்தான் கபாலி. இதை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். கொள்ளைக்கூட்டம் பற்றிய கதையை கொண்ட இப்படம் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி மலேசியாவிலும் அதற்கு அடுத்த நாள் உலகளவிலும் வெளியாகியிருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 286 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இப்படத்தில் வின்ஸ்டொன் சாவோ, ராதிகா அப்டே, தன்ஷிகா, தினேஷ் ரவி, கலையரசன் மற்றும் ஜோன் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் சந்தோஷ் நாராயணன். G. முரளி ஒளிப்பதிவு செய்திருந்ததோடு K.L பிரவீன் படத்தொகுப்பு செய்திருந்தார்.மெர்சல்

இயக்குநர் அட்லி நடிகர் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றிய படம் தான் மெர்சல். தேனாண்டால் ஸ்டூடியோ லிமிடெட் தயாரிப்பில் உருவான இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, S.J சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 1.2 பில்லியன் ரூபாய் செலவில் உருவான இப்படம் 251 கோடி வசூல் செய்தது. இப்படம் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இசைப்புயல் A.R ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார் G.K விஷ்னு. படத்தொகுப்பு செய்திருந்தார் ரூபன்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *