சிவகார்த்திகேயனின் வளர்ச்சி படிகள்

Personality
Spread the love

இந்திய தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுல் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த இந்த நடிகர் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவரின் அனைத்து திரைப்படங்களும் வெற்றியடைந்ததோடு அவருக்கு புகழையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றன. அவரை சுருக்கமாக SK என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

அவரது கலை பயணம் விஜய் டிவியில் தான் ஆரம்பமானது என்று சொல்லவேண்டும். “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான அவர் இறு தியில் அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதோடு “ஜோடி நம்பர் வன்” (Jodi Number One) போன்ற நடன போட்டிகளிலும் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து “ஏர்டெல் சூப்பர் சிங்கர்” (Airtel Super Singer), “ஜோடி நம்பர் வன் சீசன் 5” (Jodi Number One Season 5) போன்ற நிகழ்ச்சிகளில்  தொகுப்பாளரானார். பிறகு “கோபி வித் சிவா” (Koffee with Siva), அது இது எது போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார். அவற்றில் “அது இது எது” என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர் அதிகம் பேசப்பட்டார். மேலும் விஜய் அவார்ட்ஸ் (Vijay Awards) போன்ற திரைப்பட விருது நிகழ்ச்சிகளை தொகுத்து மக்கள் மனதில் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.நடிகர்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரீனா என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். பிறகு துணை நடிகராக தனுஷின் மூனு (3) திரைப்படத்தில் நடித்தார். பிறகு மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். நகைச்சுவை நடிகர் சூரியுடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்று மக்கள் மத்தியில் பேசவைத்தது. அத்துடன் அத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. பிறகு மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் போன்ற படங்களில் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி கதாநாயகனாக முத்திரை பதித்தார். ரெமோ என்ற படத்தில் முதன் முறையாக பெண் வேடத்தில் நடித்து தன் நடிப்பை சிறந்த முறையில் வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். இறுதியாக இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்தார். நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களையும் தாண்டி வேறுபட்ட கதாபாத்திரங்களையும் தன்னால் நடிக்க முடியும் என தற்போது நிரூபித்துள்ளார்.பாடகர்

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகராகவும் தன் திறமையை வெளிக்காட்டினார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பாடலை பாடியதன்  மூலம் பாடகராக அறிமுகமானார். அவர் பாடிய பாடல்களின் விபரங்களை பார்ப்போம்.

படம் பாடல் இசையமைப்பாளர்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் D. இமான்
மான் கராத்தே ராயப்புரம் பீட்டரு அனிருத்
காக்கி சட்டை அயம் சோ கூல் (I am So Cool) அனிருத்
மாப்ள சிங்கம் எதுக்கு மச்சான் N.R ரகுநாதன்
ரஜினி முருகன் ரஜினி முருகன் D. இமான்

 

பாடலாசிரியர்

கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் “கல்யாண வயசு” என்று ஆரம்பிக்கின்ற பாடலை எழுதியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் சமீபத்தில் புதிய முயற்சியில் காலடி எடுத்துவைத்துள்ளார். அதாவது தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். கனா என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை அருண்ராஜா இயக்க சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படபிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் சீக்கிரமாக திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக வளர்ச்சியடைந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவரது இந்த வளர்ச்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *