தற்போது உலகின் முதல் 10 பணக்காரர்களும் அவர்களின் விபரங்களும்

Personality
Spread the love

உலகிலுள்ள அனைத்து விடயங்களும் போட்டி என்ற ஒன்றின் மூலமே அதன் நிலை நிர்ணயிக்கப்படுகின்றன. தரம் நிர்ணயிக்கப்படும்போது தான் அதன் முன்னேற்றம் வெளிப்படுகிறது. ஆம், உலக பணக்காரர் பட்டியலும் அவ்வாறு தான். அமெரிக்காவின் வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையின் தரப்படுத்தலின் படி முதல் 10 பணக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.

1. ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)

1964 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவர் ஒரு அமெரிக்கர் ஆவார். மேலும் இவர் ஒரு தொழிநுட்ப தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் கொடையாளி ஆவார். அத்துடன் நாம் அனைவரும் அறிந்த அமேசான் (Amazon) நிறுவனத்தை நிறுவியவரும் அதன் தலைவரும் ஆவார். இவரின் தற்போதைய சொத்து பதிப்பு 131 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவர் 2017 ஆம் ஆண்டு பட்டியலில் 3 வது இடத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு 1 வது இடத்திற்கு முன்னேறினார். இவ்வருடமும் தனது 1 வது இடத்தை தக்கவைத்துள்ளார். மேலும் 100 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்த ஒரே ஒருவர் ஜெஃப் பெசோஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.2. பில் கேட்ஸ் (Bill Gates)

அமெரிக்க நாட்டவரான இவர் ஒரு மாபெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், எழுத்தாளர், கொடை வள்ளல் மற்றும் மனித நேயமிக்கவர் ஆவார். கேட்ஸ் அவர்கள் 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி பிறந்தார். மைக்ரோசொப்ட் நிறுவனத்தை நிறுவியவர்களுல் ஒருவரான இவர் அதன் தலைமை அதிகாரியாக இருந்ததோடு தற்போது தலைமை மென்பொருள் வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். 96.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துக்கு இவர் தற்போது சொந்தக்காரர் ஆவார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு பட்டியலில் முதலிடத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு 2 வது நிலைக்கு பின்தள்ளப்பட்டார். இவ்வருடமும் 2 வது இடத்திலேயே இருக்கிறார்.

3. வரேன் பஃப்ஃபட் (Warren Buffett)

வரேன் எட்வர்ட் பஃப்ஃபட் (Warren Edward Buffett) என அழைக்கப்படும் இவர் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்துள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த இவர் ஒரு மாபெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், பேச்சாளர், கொடை வள்ளல் ஆவார். அத்துடன் இவர் பெர்க்ஷயர் ஹாதாவே இன்க் (Berkshire Hathaway Inc) எனும் பன்னாட்டு கூட்டு நிறுவனத்தின் தலைவர் ஆவார். தற்போதைய இவரது சொத்து மதிப்பு சுமார் 82.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.4. பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault)

இவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பிறந்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவரை தொழிலதிபர், முதலீட்டாளர், கலை பொருட்கள் சேகரிப்பாளர் என சொல்ல முடியும். பாரிஸில் அமைந்துள்ள எல்.வி.எம்.எச் (LVMH) என்கிற பன்னாட்டு ஆடம்பர பொருட்கள் கூட்டு நிறுவனத்திற்கு பெர்னால்ட் அவர்கள் தலைவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 76 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் ஐரோப்பாவில் முதல் பணக்காரராக இருப்பதோடு உலக அளவில் 4 வது இடத்தை பிடித்துள்ளார்.

5. கார்லொஸ் ஸ்லிம் (Carlos Slim)

1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி பிறந்த இவர் வட அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபர், பொறியியலாளர், முதலீட்டாளர் மற்றும் கொடை வள்ளல் ஆவார். இவர் அமெரிக்கா மொவில் (America Movil) எனும் தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனம் மற்றும் க்ரூபோ கார்சோ (Grupo Carso) என்கிற உலகளாவிய கூட்டு நிறுவனம் ஆகியவற்றின் தலைவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ 64 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

6. அமான்சியோ ஓர்டேகா (Amancio Ortega)

இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி பிறந்திருக்கிறார். இன்டிடெக்ஸ் (Inditex) எனும் பன்னாட்டு ஆடை கம்பனியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவரது இக்கம்பனியின் தலைமையகம் ஸ்பெயினின் ஆர்டெக்ஷோ (Arteixo) எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓர்டேகா அவர்களின் சொத்தின் பெறுமதி 62.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இவர் ஐரோப்பாவின் 2 வது பணக்காரர் ஆவார்.7. லாறி எல்லிசன் (Larry Ellison)

இவரும் ஒரு அமெரிக்கராவார். லாறி அவர்கள் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பிறந்தார். தொழிநுட்ப வணிகராகவும் கொடையாளியாகவும் இருக்கும் இவர் ஒரக்கல் நிறுவனத்தின் (Oracle Corporation) இணை ஸ்தாபகரும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். அது ஒரு மென்பொருள் தொழிநுட்ப கம்பனி ஆகும். அத்துடன் உலகில் 3 வது இடத்திலுள்ள மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமாகும். லாறி அவர்களின் முழு சொத்து மதிப்பானது 62.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

8. மார்க் சுக்கர்பெர்க் (Mark Zuckerberg)

மிக இளமையான பணக்காரர் என்றே இவரை கூறவேண்டும். 1984 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி இவர் பிறந்தார். அமெரிக்க நாட்டை சேர்ந்தவரான மார்க் ஒரு தொழிநுட்ப தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். தற்போது அனைவரும் மிக ஆர்வமாக காலத்தை கழிக்கும் முகப்புத்தகத்தின் (Facebook) தலைவர் ஆவார். இவரது சொத்து பெறுமதி 62.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2007 ஆம் ஆண்டு தனது 23 வது வயதில் உலகின் தன் சுய முயற்சியினால் உயர்ந்த பில்லியனர் என்ற பெருமையை பெற்றார் மார்க் அவர்கள்.

9. மைக்கல் ப்லூம்பேர்க் (Michael Bloomberg)

பட்டியலில் 9 ஆம் இடத்தில் இருக்கும் இவரும் ஒரு அமெரிக்கராவார். இவர் 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிறந்திருக்கிறார். இவர் ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கொடையாளி ஆவார். ப்லூம்பேர்க் எல்.பீ எனும் கம்பனியின் உரிமையாளரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். இவரது சொத்தின் மதிப்பு 55.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

10. லாறி பேஜ் (Larry Page)

கூகுல் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர் தற்போது கூகுல் நிறுவனத்தின் தாய் கம்பனியான அல்பாபெட் இன்க் (Alphabet Inc) இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவர் 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பிறந்துள்ளார். இவர் ஒரு கணனி விஞ்ஞானி மற்றும் இணைய தொழிலதிபர் ஆவார். இவரது தற்போதைய சொத்து பெறுமதி 50.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இவர் ஒரு அமெரிக்கர் ஆவார்.உலக பணக்காரர் பட்டியலில் மொத்தமாக 2153 பேர் உள்ளனர். இவற்றில் 609 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இப்பணக்காரர்கள் அனைவரினதும் மொத்த சொத்து மதிப்பு 8.7 ட்ரில்லியன் (Trillion) அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *