விக்ரமின் சாமி ஸ்கொயார் பற்றிய முழு விபரம்

Movie
Spread the love

சாமி ஸ்கொயார் நடிகர் விக்ரமின் வரவிருக்கும் ஆக்ஷன், த்ரில்லர் படமாகும். இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்குகிறார். இது விக்ரம், ஹரி கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். இதற்கு முதல் இருவரும் அருள் மற்றும் சாமி ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். சாமி ஸ்கொயார் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படத்தின் தொடர் கதையாக அமைந்த 2 ஆம் பாகமாகும். 15 வருடங்களின் பின் இத்திரைப்படத்தின் இரண்டாவது பகுதி வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

நடிகர்கள்

 • விக்ரம்
 • கீர்த்தி சுரேஸ்
 • ஐஸ்வர்யா ராஜேஷ்
 • பிரபு
 • பாபி சிம்ஹா
 • ஜோன் விஜய்
 • O.A.K சுந்தர்
 • சூரி
 • இமான் அண்ணாச்சி
 • டெல்லி கணேஷ்
 • சுமித்ரா
 • உமா ரியாஸ் கான்
 • ஐஸ்வர்யா
 • சன்ஜீவ்
 • குணாலன்
 • சாம்ஸ்
 • ஹரிஷ்
 • சுதா சந்திரன்
 • கோட்டா ஸ்ரீனிவாச ராவோ


ஆரம்பத்தில் நடிகை த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்ட போதிலும் அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து அக்கதாபாத்திரத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தை தமீன்ஸ் பிலிம் (Thameens Films) என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. ப்ரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை செய்வது V.T விஜயனும் T.S ஜெய்யும் ஆகும். இப்படத்திற்கு சண்டை பயிற்சியை கனல் கண்ணன் மற்றும் சில்வா  வழங்குவதோடு கலை இயக்குநராக செயல்படுபவர் மிலான் ஆகும்.

ஆரம்பம்

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இருமுகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஹரி மீண்டும் நடிகர் விக்ரமுடன் இணைந்து பணியாற்ற போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பிறகு சாமி படத்தின் தொடர் கதை என உறுதி செய்யப்பட்டது. படத்தின் முதல்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதிலும் படபிடிப்புகளை கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஆரம்பிப்பதற்கு எண்ணி இருந்தார்கள். எனினும் செப்டம்பர் மாதமளவில் தான் புகைப்பட பணிகளே ஆரம்பிக்கப்பட்டன. இதன்பின் இயக்குநர் ஹரி சென்னை, டில்லி, முசூரி மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் படபிடிப்புகள் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். எனினும் திருவனந்தபுரத்தின் பல்வேறு இடங்களில் தான் பெரும்பாலான காட்சிகள் படமெடுக்கப்பட்டுள்ளன. மேலும் காரைக்குடியிலும் படபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன.பாடல் மற்றும் இசை

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கப்போவதாக கருத்துக்கள் வெளிவந்த போதிலும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இறுதியில் உறுதி செய்யப்பட்டார். இது விக்ரமுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக அமைவதோடு ஹரியுடன் இணைந்து பணியாற்றும் ஐந்தாவது படமாக அமைகிறது. படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. அந்தவகையில் பாடலாசிரியர் விவேகா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பஸ்ட் லுக் மோசன் போஸ்ட்டர் (First look motion poster) இவ்வாண்டு மே மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டதோடு ட்ரெய்லர் (Trailer) ஜூன் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதுவரை இப்பட ட்ரெய்லரை 14 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். இதில் வரும் வசனங்கள் அப்படியே மிரளவைக்கின்றன. ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு படம் மீதான எதிர்பார்ப்புக்களும் அதிகரித்துள்ளன. இம்மாதம் இத்திரைப்படம் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *