விராட் கோலி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

Personality
Spread the love

இந்திய அணியின் ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி தற்போதைய அணி தலைவர் ஆவார். வலது கை துடுப்பாட்ட வீரரான இவர் ரன் மெஷின் (Run Machine) என எல்லோராலும் அழைக்கப்படுகிறார். அதாவது விரைவில் ஓட்டங்களை குவிக்கக்கூடிய வீரர் என்ற பெருமையை பெற்றவர். விராட் கோலி உலகின் மிகச்சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரராக கருதப்படுகிறார்.

பிறப்பு

விராட் கோலி 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி டில்லியில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ப்ரேம் கோலி வழக்கறிஞராக பணியாற்றியவர். இல்லத்தரசியாக இருந்த விராட் கோலியின் தாயாரின் பெயர் சரோஜ் கோலி. கோலியின் அண்ணனின் பெயர் விகாஷ். அக்காவின் பெயர் பாவ்ணா. கோலி தான் 3 வயதாக இருக்கும் போதே துடுப்பாட்ட மட்டையை விசிரிக்கொண்டு தனது தந்தையை பந்து வீசும்படி சொல்வாராம்.கிரிக்கெட் வாழ்க்கை

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாக முன்னர் தனது நகர கிரிக்கெட் அணியில் விளையாடினார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டு 2008 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ணத்தை வென்றார். இந்த உலக கிண்ண போட்டிகள் மலேசியாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் சில மாதங்கள் கழித்து தனது 19 வயதில் இலங்கைக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நடைபெற்ற தனது முதலாவது ஒருநாள் (ODI) போட்டியில் விளையாடினார். 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற இருபதுக்கு இருபது (T20) போட்டியில் அறிமகமானார். அவரது முதலாவது டெஸ்ட் (Test) போட்டியாக அமைந்தது 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மேற்கிந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியாகும்.

கோலியின் அணித்தலைமையின் கீழ் இதுவரை (02/09/2018) நடந்த போட்டிகளின் விபரங்கள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

சமநிலை

டெஸ்ட் போட்டிகள் (Test)

38

22

07

09

ஒருநாள் போட்டிகள் (ODI)

49

38

10

இருபதுக்கு இருபது (T20)

15

10

05

 தொண்டு நிறுவனம்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விராட் கோலி பஃவுண்டேஷன் (Virat Kohli Foundation) என்கிற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். சமுதாயத்தில் மிகவும் கஷ்டப்படுகிற, அதாவது அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு உதவுவதற்காக இந்த தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார் கோலி. அத்துடன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்நிறுவனத்திற்கு நிதிகள் திரட்டப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு ஈபே (eBay) நிறுவனம் மற்றும் சேவ் த சில்ரன் (Save the Children) அமைப்பு ஆகியன விராட் கோலி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அடிப்படை வசதியற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக தொண்டு ஏலத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

விருதுகள்

2017 ஆம் ஆண்டு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி (Sir Garfield Sobers Trophy) விருதை பெற்றார். 2012, 2017 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டின் சிறந்த ஐ.சி.சி (ICC) ஒருநாள் (ODI) வீரர் என்ற விருதை பெற்றார். அத்துடன் உலகின் முன்னணி விஸ்டென் துடுப்பாட்ட வீரர் (Wisden Leading Cricketer in the World) விருதை 2016 ஆம் ஆண்டும் 2017 ஆம் ஆண்டும் பெற்றார். 2013 ஆம் ஆண்டு அர்ஜுணா விருதை பெற்றார். இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்ம ஸ்ரீ விருதை 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் கோலி. விராட் கோலி இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) எஃ.சி கோவா (FC Goa) அணி ஐ.பீ.டி.எல் (International Premier Tennis League) உரிமையுடைய யூ.ஏ.ஈ ரோயல்ஸ் (UAE Royals) அணி மற்றும் பீ.டப்லியூ.எல் (Pro Wrestling League) இல் பெங்களூர் யோதாஸ் அணி ஆகியவற்றின் இணை உரிமையாளர் ஆவார். அதுமட்டுமல்லாமல் 20 க்கு மேற்பட்ட வணிக நிறுவனங்களுடன் ஒப்புதல் ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.கோலி உலகின் மிக பிரபலமான விளையாட்டு வீரர் என்று ஈ.எஸ்.பி.என் (ESPN) ஆல் தரப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் இவர் உலகின் 100 மிக செல்வாக்குள்ள மக்களில் ஒருவர் என டைம் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ளார். இவர் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார் என்றே கூறமுடியும்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *