ரவுடி பேபியின் மாபெரும் சாதனை

Song
Spread the love

பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மாரி 2 திரைப்படம் வெளியானது. இப்படத்தை Wunderbar Films நிறுவனம் தயாரித்திருந்தது.

முன்னணி கதாபாத்திரங்களில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டொவினோ தாமஸ் (Tovino Thomas), ரொபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவண் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.




இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் யூடியுப்பில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

இப்பாடல் இதுவரை 1 பில்லியன் அதாவது 100 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அத்துடன் 4 மில்லியன் லைக்களையும் (Likes) பெற்றுள்ளது.

தென் இந்திய சினிமாவிலேயே 1 பில்லியன் வீவ்ஸை (Views) கடந்த முதல் பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெறுகிறது.

அதிக முறை பார்க்கப்பட்ட இந்திய இசை வீடியோக்கள் பட்டியலில் ரவுடி பேபி பாடல் 15 வது இடத்தை பிடித்துள்ளது.

இப்பாடலுக்கு நடிகரும் நடன இயக்குநருமாகிய பிரபுதேவா அவர்கள் நடன பயிற்சியை வழங்கியுள்ளார். இப்பாடலின் வெற்றிக்கு இவரின் வித்தியாசமான நடன அமைப்பு மேலும் பலம் சேர்த்தது என்றே கூற வேண்டும்.

குறிப்பாக இப்பாடலில் தனுஷுடன் சேர்ந்து நடனமாடிய சாய்பல்லவியின் நடனம் அனைவராலும் நன்கு பேசப்பட்டது. இப்பாடலின் மூலம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் சாய்பல்லவி.

ரவுடி பேபி 1 பில்லியன் வீவ்ஸை கடந்தது குறித்து தனுஷ் தனது ட்விட்டர்  பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கொலவெரி பாடலின் 9 வருட பூர்த்தியன்றே ரவுடிபேபி பாடலும் 1 பில்லியன் வீவ்ஸை கடந்தது என்றும் 1 பில்லியன் வீவ்ஸை பெற்ற முதல் தென் இந்திய பாடல் என்று பெருமையடைகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடலை தனுஷுடன் இணைந்து தீ (Dhee) என்று அழைக்கப்படும் தீக்ஷிதா வெங்கடேஷன்பாடியுள்ளார். பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரரும் தனுஷ் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

படக்குழுவினரை New Smart Tamil சார்பில் வாழ்த்துகிறோம்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *