சூப்பர்ஸ்டாரின் தர்பார் பற்றிய முழு விபரம்

Movie
Spread the love

சர்கார் திரைப்படத்தை தொடர்ந்து A.R முருகதாஸ் இயக்கும் திரைப்படம் தான் தர்பார். இது இவர் இயக்கும் 13 வது படமாகும். இப்படத்தை லைகா ப்ரொடக்ஷ்ன் சார்பில் அல்லிராஜா சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

நடிகர்கள்

 • ரஜினிகாந்த்
 • சுனில் ஷெட்டி
 • நயன்தாரா
 • நிவேதா தோமஸ்
 • யோகி பாபு
 • ஸ்ரீ்மன்
 • தம்பி ராமையா
 • நவாப் ஷா
 • ஜடின் சர்னா (Jatin Sarna)
 • ப்ரேடெக் பாபர் (Prateik Babbar)
 • தலிப் தாஹில் (Dalip Tahil)

மேலும் படிக்க:

 

இது ஒரு ஆக்ஷ்ன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. முதன்மை புகைப்படப்பிடிப்பு பணிகள் 10 ஆம் திகதி மும்பையில் ஆரம்பித்தது.இது சூப்பர்ஸ்டாரின் 167 வது திரைப்படமாகும். ரஜினிகாந்த் மற்றும் A.R முருகதாஸ் இணைந்து பணியாற்றும் 1 வது திரைப்படமாகும். அத்துடன் லைகா ப்ரொடக்ஷ்ன் நிறுவனம் 2.0 இற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைகிறது.

2001 ஆம் ஆண்டு வெளிவந்த 12பீ (12B) திரைப்படத்திற்கு பிறகு சுனில் ஷெட்டி தமிழில் நடிக்கும் 2 வது திரைப்படம் இதுவாகும்.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் காவல்துரை அதிகாரியாக நடக்கிறார். இவர் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இறுதியாக 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “பாண்டியன்” திரைப்படத்தில் போலீஸாக நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணிபுரிகிறார். மேலும் A. ஸ்ரீ்கர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

கலை இயக்குநர்களாக விஜய் கொட்கே மற்றும் சந்தானம் ஆகியோர் தொழிற்படுகிறார்கள். லக்ஷ்மன் ஷெல்லா, ராம் ஷெல்லா ஆகிய இருவரும் இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி அளித்துள்ளார்கள்.

நிஹாரிகா கான் ஆடை வடிவமைப்பு செய்கிறார்.

இசை

அனிருத் ரவிசந்தர் இப்படத்திற்கு இசை வழங்கியுள்ளார். இவர் இதற்கு முன்பாக ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட திரைப்படத்திலும் A.R முருகதாஸுடன் இணைந்து கத்தி படத்திலும் பணியாற்றிருந்தார்.விவேக் அவர்கள் இப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார். மேலும் S.P பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “சும்மா கிழி” எனும் பாடல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 7 ஆம் திகதி மிக பிரமாண்டமாக ஜவஹர்லால் நேரு உட்புற மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. டீசர் மற்றும் ட்ரெய்லர் பற்றிய எந்த விபரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் தைப்பொங்கலுக்கு இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *