உத்தியோகபூர்வ மாஸ்டர் டீசர் இதோ

Tamil
Spread the love

நடிகர் விஜயின் 64 வது திரைப்படமாக உருவாகியுள்ளது மாஸ்டர். இத்திரைப்படத்தை “கைதி” திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கணகராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

XB Film Creators சார்பில் சேவியர் ப்ரிட்டோ (Xavier Britto) அவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளதோடு Seven Screen Studio சார்பில் லலித் குமார் விநியோகித்துள்ளார்.
முன்னணி கதாபாத்திரங்களில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளார்கள். அதே சமயம் மாலவிகா மோஹனன், சாந்தனு பாக்கியராஜ், அண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், நாசர் உள்ளிட்ட மேலும் பலர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசை வழங்கியுள்ளார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யன் சூர்யன் இப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார்.

கல்லூரி பேராசிரியராக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
டீசரை பார்க்கும் போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்குமே இப்படம் தனது திரைப்பட பட்டியலில் விசேட இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

டீசர் முழுவதும் விஜய் மாஸாக காட்டப்பட்டுள்ளார். ஆகவே படத்தின் எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

டீசரை பார்க்கையில் சண்டை காட்சிகள் நிறைந்துள்ளதோடு கல்லூரியில் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளை பற்றிய ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது என்று நினைக்க தோன்றுகிறது.

டீசர் வெளியாகி 4 மணித்தியாலயத்தில் 6.9 மில்லியன் வீவ்ஸ்களை (Views) பெற்றுள்ளது. அத்துடன் 1.4 மில்லியன் லைக்சையும் (Likes) பெற்றுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கணகராஜின் இயக்கம் இந்திய சினிமாவில் நன்கு பேசப்படும் என்பது டீசரை பார்க்கும் போது தெளிவாக புரிகிறது.

படக்குழுவினருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

டீசர் இதோ.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *