தளபதியின் பீஸ்ட் பற்றிய முதன்மையான தகவல்கள்

Tamil
Spread the love

தளபதி விஜயின் 65 வது திரைப்படமாக உருவாகி வருகிறது பீஸ்ட் (Beast). தளபதியுடன் முதன் முறையாக கைக்கோக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் உரிமையாளரான கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார்கள்.

நடிகர்கள்

  • விஜய்
  • பூஜா ஹெக்டே
  • செல்வராகவன்
  • யோகி பாபு
  • VTV கணேஷ்
  • ஷைன் டொம் சகோ (Shine Tom Chacko)
  • அபர்ணா தாஸ்
  • லில்லிபுட் பரூக்கி (Lilliput Faruqui)
  • அன்குர் அஜித் விகல் (Ankur Ajit Vikal)
  • சதிஸ் கிருஷ்ணன்

இப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். இது அனிருத் விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் 3 வது திரைப்படமாகும்.இதற்கு முன்னதாக, கத்தி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தார்கள்.

அதேபோன்று, இயக்குநர் நெல்சன் அவர்களும் அனிருதும் இணையும் 3 வது படமும் ஆகும்.

மொத்தத்தில் விஜய், நெல்சன் அனிருத் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி என்றே கூறலாம்.

இப்படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அதேவேளை, R. நிர்மல் அவர்கள் படத்தொகுப்பு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் சோதனை படப்பிடிப்பு இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சென்னையில் சன் டீவி வலையமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அதன் பிறகு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சன் டீவி ஸ்டூடியோவில் படப்பூஜை இடம்பெற்றதோடு படம் ஆரம்பிக்கப்பட்டது.

படத்தின் 30% மான பகுதி ஜோர்ஜியாவிலும் மிகுதி படப்பிடிப்பை சென்னையிலும் மேற்கொள்வதற்கு படக்குழுவினர் தீர்மானித்திருந்தார்கள்.

அதன்படி அறிமுக சண்டை காட்சி ஜோர்ஜியாவில் எடுக்கப்பட்ட பின்னர் விஜய் அவர்கள் சென்னை வந்தார்.

15 நாட்கள் ஜோர்ஜியாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார் விஜய்.

அதன் பின்னர் கொவிட் 19 நோய் அதிகரிப்பு காரணமாகவும் தமிழ் நாட்டில் ஊரங்கு உத்தரவு பிரப்பித்ததனாலும் தயாரிப்பு பணிகளை இடைநிறுத்துமாறு விஜய் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் ஜூலை மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பமானது. அதன் படி 2 ஆம் கட்டமாக 20 நாட்கள் படப்பிடிப்பு நீடிக்கப்பட்டு விஜய் மற்றும் ஹெக்டே  அவர்களின் பாடல் காட்சி எடுக்கப்பட்டது.

அதற்கு பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்களின் வலிமை திரைப்பட படப்பிடிப்பு இடம்பெற்ற இடத்தில் மெலுமொரு காட்சி படமாக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக கோகுலம் ஸ்டூடியோவிற்கு நகர்ந்தனர்.
படப்பிடிப்பின் 3 ஆம் கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமானது.

விஜய் மற்றும் சகோ இடம்பெறும் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

படத்தின் இறுதி சண்டைக்காட்சிகளை ரஷ்யாவில் படமாக்க படக்குழு தீர்மானித்துள்ளது.

இப்படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருட பொங்கல் தினம் தளபதி ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான பொங்கலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.

இக்கட்டுரையை அனைவருக்கும் பகிரவும்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

2 thoughts on “தளபதியின் பீஸ்ட் பற்றிய முதன்மையான தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *