தல அஜிதின் வலிமை பற்றிய முதன்மையான அப்டேட்ஸ்

Tamil
Spread the love

வலிமை திரைப்படம் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்களின் 60 வது திரைப்படமாகும்.

இப்படத்தை இயக்குநர் H. விநோத் அவர்கள் இயக்குகிறார். அஜிதுடன் இணைந்து இவர் பணியாற்றும் 2 வது படம் இதுவாகும்.

மேலும், இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios) மற்றும் போனி கபூர் அவர்களின் பேவீவ் புரொஜெக்ட்ஸ் எல்எல்பீ (Bayview Projects LLP) ஆகிய தயாரிப்பு கம்பனிகள் இணைந்து தயாரிக்கின்றன.

நடிகர்கள் 

  • அஜித் குமார்
  • ஹுமா குரேஷி (Huma Qureshi)
  • கார்த்திகேயா கும்மாகொண்டா (Kartikeya Gummakonda)
  • பாணி ஜே (Bani J)
  • சுமித்ரா
  • யோகி பாபு
  • அச்யுத் குமார்
  • புகழ்
  • ராஜ் ஐயப்பா
  • பேர்லே மானேய் (Pearle Maaney)
  • சிவாஜி குருவாயூர்
  • பவெல் நவகீதன்
  • சங்கீதா வீ


இப்படத்தின் இசை இயக்குநராக யுவண் சங்கர் ராஜா தொழிற்படுகிறார்.

இவர் நடிகர் அஜிதுடன் சேர்ந்து பணி புரியும் 8 வது படம் இதுவாகும்.

அந்தவகையில் ஏற்கனவே இசையமைத்த அஜிதின் பட பாடல்களுக்கு யுவணின் தீம் இசை படங்களின் வெற்றிக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது என்றே கூறவேண்டும்.

குறிப்பாக பில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்களை சொல்லலாம்.

விஜய் வேலுகுட்டி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

அத்தோடு ஒளிப்பதிவு பணிகளை நீரவ் ஷா அவர்கள் மேற்கொள்கிறார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரதான புகைப்பட பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதிலும் அதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஹைதராபாத்தின் ராமோஜி திரைப்பட நகரத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் அஜித் அவர்களின் ஒரு சண்டைக்காட்சி படக்குழுவால் படமாக்கப்பட்டது.

இதற்கு 2 வாரங்கள் சென்றது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

அதனை தொடர்ந்து, சென்னை நகரத்திலும் ரேகா பூந்தோட்டத்திலும் சில காட்சிகளை படமாக்க படக்குழு எண்ணியிருந்தது.

அந்தவகையில், மோட்டார் சைக்கிலில் துரத்தும் காட்சியை எடுக்கும் போது நடிகர் அஜித் ஒரு விபத்துக்குள்ளானார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் செலுத்திய மோட்டார் சைக்கில் வழுக்கி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது அவரது தோல்கள் மற்றும் கால்கள் சிராய்வடைந்திருந்தன. இதனால் படப்பிடிப்பு சற்று தாமதமானது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கில் பந்தயம் உட்பட சில காட்சிகளை படமாக்க எதிர்பார்த்திருந்த நிலையில் கொவிட் 19 நோய் பரவல் காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்டது.

மேலும், ஸ்பெயின் மற்றும் மொரோக்கோவிலும் படப்பிடிப்புகளை முடக்கலுக்கு பிறகு மேற்கொள்ள நினைத்திருந்தது படக்குழு.

எனினும், நோய் பரவல் ஆனது வெளிநாட்டு படப்பிடிப்புகளை பாதித்தது.

அதன் பிறகு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமானது.

இதன்போது படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் செங்குன்றத்தில் படமாக்கப்பட்டன.

இப்படத்தில் முக்கியமாக ஹாலிவுட் ஐ சேர்ந்த பிரபல சண்டைப் பயிற்சியாளரை வரவழைத்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவிலேயே புது வகையான சண்டை காட்சிகளை அறிமுகப்படுத்துவதற்காக இவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

அக்டோபரில் சில சண்டைக்காட்சிகளை டெல்லியில் படமெடுக்க தீர்மானித்திருந்தபோதிலும் கொரோனா பரவலால் அரசாங்கம் அனுமதி தர மறுத்தது.

அதனால், அதற்காக ஹைதராபாத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.

25 ஆம் திகதி நடிகர் அஜித் அவர்கள் ஹைதராபாத்தில் மேற்கொள்ளப்பட்ட படப்பிடிப்பில் இணைந்துகொண்டார்.

டிசம்பர் மாதம் அளவில் படத்தின் பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் தவிர்ந்த 80% மான காட்சிகள் முடிவடைந்திருந்தன.




2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வெளிநாட்டு படப்பிடிப்புகள் தவிர்ந்த மற்ற அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக படத்தை வெளியிடும் தினம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்.

இக்கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

2 thoughts on “தல அஜிதின் வலிமை பற்றிய முதன்மையான அப்டேட்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *