2020 இன் முதல் 10 பணக்காரர்கள்

Personality
Spread the love

பணக்காரர்கள் பட்டியலானது அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையினால் வெளியிடப்படும். அந்த வகையில் இம்முறை பணக்காரர்கள் பட்டியலில் 2095 கோடீஸ்வரர்கள் அடங்குகிறார்கள்.

அவர்களின் சொத்து மதிப்பானது 8 ட்ரில்லியன் (Trillion) அமெரிக்க டொலர்களாகும்.

1. ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)

கடந்த வருடம் போல் இவ்வருடமும் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு இணைய தொழிலதிபர், ஊடக உரிமையாளர், முதலீட்டாளர் ஆவார்.

மேலும், இவர் உலகில் முதல் நிலையில் உள்ள அமேசான் (Amazon) நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.

அத்துடன் ப்லூ ஒரிஜின் (Blue Origin) எனும் விமான உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பானது 113 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2. பில் கேட்ஸ் (Bill Gates)

இவர் ஒரு தொழிலதிபர், மென்பொருள் உருவாக்குபவர், கொடையாளி ஆவார். நாம் அனைவரும் பயன்படுத்தும் மைக்ரோசொப்டின் (Microsoft) இணை நிறுவுனரும் ஆவார்.

பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கும் இவரின் சொத்து மதிப்பானது 98 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
3. பெர்னார்ட் ஆர்னல்ட் மற்றும் குடும்பம் (Bernard Arnault)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஆர்னல்ட் அவர்கள் ஒரு தொழிலதிபர், கலை சேகரிப்பாளர் ஆவார்.

இவர் எல்.வீ.எம்.எச் (LVMH) மற்றும் கிரிஸ்டியன் டையர் எஸ்.ஈ (Christian Dior SE) ஆகிய ஆடம்பர பொருட்கள் கம்பனிகளின் தலைவர் ஆவார்.

இவரின் சொத்து மதிப்பு 76 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

4. வரேன் பஃப்ஃபெட் (Warren Buffett)

பட்டியலில் 4 வது இடத்தில் உள்ள இவர் ஒரு முதலீட்டாளர், தொழிலதிபர், கொடைவள்ளல் ஆவார்.

இவர் பெர்க்ஷியர் ஹாதாவேய் (Berkshire Hathaway) எனும் பன்னாட்டு கூட்டு நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாவார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு 67.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

5. லாறி எல்லிசன் (Larry Ellison)
ஒரெக்கல் கூட்டுத்தாபனத்தின் (Oracle Corporation) இணை நிறுவுனரும் தலைமை தொழிநுட்ப அதிகாரியுமாகிய லாறி எல்லிசன் அவர்கள் ஒரு அமெரிக்க தொழிலதிபர், கொடையாளி, முதலீட்டாளர் ஆவார்.

ஒரெக்கல் கூட்டுத்தாபனம் என்பது அமெரிக்க பன்னாட்டு கணனி தொழிநுட்ப கூட்டுத்தாபனம் ஆகும்.

59 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கு லாறி எல்லிசன் சொந்தக்காரர் ஆவார்.

6. அமென்சியோ ஒர்டெகா (Amancio Ortega)

இவர் ஒரு ஸ்பெயின் நாட்டு தொழிலதிபராவார். மேலும் இன்டிடெக்ஸ் (Inditex) எனும் ஸ்பானிய பன்னாட்டு ஆடை கம்பனியின் நிறுவுனரும் தலைவரும் ஆவார்.

இவரின் சொத்து மதிப்பானது 55.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

7. மார்க் சுக்கெர்பெர்க் (Mark Zuckerberg)

இவர் ஒரு ஊடக முக்கியஸ்தர், இணைய தொழிலதிபர், கொடைவள்ளல் ஆவார்.

தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் (Facebook) நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஆவார்.

முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் மிகவும் இளமையான இவரின் சொத்து மதிப்பானது 54.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
8. ஜிம் வால்டொன் (Jim Walton)

இவர் வால்மார்ட் (Walmart) எனும் உலகின் மிகப்பெரிய சில்லறை வியாபார கூட்டுத்தாபனத்தின் அதிஷ்ட வாரிசு ஆவார்.

பட்டியலில் 8 வது இடத்தில் உள்ள இவரின் சொத்து மதிப்பு 54.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

9. அலைஸ் வால்டொன் (Alice Walton)

இவரும் வால்மார்ட் கூட்டுத்தாபனத்தின் வாரிசு ஆவார். அதாவது, ஜிம் வால்டொன் அவர்களின் சகோதரி ஆவார்.

இவர் 54.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆவார்.

10. எஸ். ரொப்சன் வால்டொன் (S.Robson Walton)

ஜிம் வால்டொன் மற்றும் அலைஸ் வால்டொன் ஆகிய இருவரின் மூத்த சகோதரரான ரொப்சன் அவர்களும் வால்மார்ட் கூட்டுத்தாபனத்தின் வாரிசு ஆவார்.

மேலும், இவர் வால்மார்ட் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் ஆவார்.

இவரின் சொத்து மதிப்பானது 54.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இப்பட்டியலில் இடம்பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *