நடிகர் கார்த்தியின் வெளியாகவுள்ள திரைப்படங்கள்

Tamil
Spread the love

1. சர்தார்

இது ஒரு வெவு பார்க்கும் த்ரில்லர் படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை P.S மித்ரன் இயக்குகிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் (Prince Pictures) சார்பில் S. லக்ஷ்மண் குமார் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் முன்னணி பாத்திரங்களில் கார்த்தியும் ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கிறார்கள்.

மேலும், சிம்ரன், முனிஷ்காந்த், சன்கி பாண்டே (Chunky Pandey), முரளி ஷர்மா, இலவரசு ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சன்கி பாண்டே அவர்கள் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

G.V பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை வழங்குகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜோர்ஜ் C. வில்லியம்ஸ் (George C. Williams)  செய்கிறார்.

ரூபண் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.



 

2. விருமன்

நடிகர் கார்த்தி கொம்பன் பட இயக்குநரான முத்தையா அவர்களுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைகிறார்.

கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் இப்படத்தில் அறிமுகமாகிறார். இவர் பிரபல இயக்குநர் ஷங்கர் அவர்களின் இளைய மகளாகும்.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை 2D எண்டர்டெயிண்ட்மெண்ட் (2D Entertainment) சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இப்படத்திற்கு யுவண் ஷஙகர் ராஜா இசையமைக்கிறார்.

 

3. பொன்னியின் செல்வன்

இது பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் என்று சொல்லலாம். இப்படத்தை மாபெரும் இயக்குநர் மணி ரத்னம் அவர்கள் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் (Madras Talkies) மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கிறன்றன.

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சான், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, சரத்குமார், சோபிதா துலிபலா, R. பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், நாசர், லால், ரியாஸ் கான், நிழல்கள் ரவி உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்திற்கு இசைப் புயல் A.R ரகுமான் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

ரவி வர்மண் அவர்கள் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் A. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் 500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாகிறது.

இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளதுடன் முதல் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் அனைத்து திரைப்படங்களும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.




இக்கட்டுரையை அனைவருக்கும் பகிரவும்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

2 thoughts on “நடிகர் கார்த்தியின் வெளியாகவுள்ள திரைப்படங்கள்

  1. திரையரங்குகள் அனைத்தையும் மூடி வைத்துவிட்டு இவ்வளவு திரைப்படங்களை வெளியிட்டால் நாம் எவ்வாறு பார்ப்பது?

    1. கூடிய விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் நண்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *