உலக பணக்காரர்கள் பட்டியல் 2021

Personality
Spread the love

உலக பணக்காரர்கள் பட்டியல் வழமை போல அமெரிக்க வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையினால் வெளியிடப்பட்டுள்ளது. இது 35 வது வருடாந்த பணக்காரர்கள் பட்டியலாகும்.

அதன்படி இம்முறை இப்பட்டியலில் 2,755 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவர்களின் மொத்த சொத்து மதிப்பானது 13.1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

1. ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)

57 வயதான இவர் அமேசான் இலத்திரனியல் வணிக இணையதளத்தின் உரிமையாளர் ஆவார். மாபெரும் தொழிலதிபராக இருப்பதுடன் இவர் ஒரு ஊடக உரிமையாளர், முதலீட்டாளர் ஆவார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பானது 177 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2. எலோன் மஸ்க் (Elon Musk)

முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதன் முறையாக இடம்பெற்றுள்ள இவர் டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பெர்ஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.

இவரின் மொத்த சொத்து மதிப்பானது 151 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.



3. பெர்னார்ட் ஆர்னல்ட் மற்றும் குடும்பம் (Bernard Arnault & Family)

கடந்த வருடமும் இப்பட்டியலில் 3 வது இடத்தில் இருந்த இவர்கள் இவ்வருடமும் அதே இடத்தில் உள்ளனர்.

பிரான்ஸை சேர்ந்த இவர்கள் எல் வீ எம் எச் (LVMH) நிறுவனத்தின் உரிமையாள்ர்கள் ஆவர்.

150 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இவர்கள் சொந்தக்காரர்கள் ஆவர்.

4. பில் கேட்ஸ் (Bill Gates)

மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனத்தின் இணை நிறுவுனராகிய பில் கேட்ஸ் அவர்கள் ஒரு தொழிலதிபர், முதலீட்டாளர், மென்பொருள் வடிவமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் கொடைவள்ளல் ஆவார்.

கடந்த வருடம் 2 வது இடத்தில் இருந்த இவர் இவ்வருடம் 4 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

இவரது தற்போதைய சொத்து மதிப்பானது 124 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

5. மார்க் சுக்கர்பெர்க் (Mark Zuckerberg)

இவர் தற்போது நாம் அனைவரும் பயன்படுத்தும் முகப்புத்தகத்தின் (Facebook) இணை ஸ்தாபகர் ஆவார். மேலும் இவர் ஒரு இணைய தொழிலதிபர், கொடையாளி ஆவார்.

கடந்த வருடம் 7 ஆம் இடத்திலிருந்து தற்போது 5 வது இடத்திற்கு முன்னேரியுள்ள இவரின் மொத்த சொத்து பெறுமதியானது 97 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

6. வாரேன் பஃப்ஃபட் (Warren Buffett)

அமெரிக்க தொழிலதிபராகவும் முதலீட்டாளராகவும் கொடையாளியாகவும் இருக்கும் இவர் பேர்க்ஷியர் ஹாதவே (Berkshire Hathaway) எனும் அமெரிக்க பன்னாட்டு  நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிறுவாக அதிகாரியுமாவார்.

கடந்த வருடம் இவர் இப்பட்டியலில் 4 வது இடத்தில் இருந்தார். எனினும் இவ்வருடம் 6 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டிருக்கிறார்.

இருந்தபோதிலும் இவர் 96 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சொத்துக்களுக்கு உரிமையாளர் ஆவார்.

7. இலாரி எல்லிசன் (Larry Ellison)

ஒரேக்கல் கூட்டுத்தாபனத்தின் இணை ஸ்தாபகரான இவர் தற்போது அக்கூட்டுத்தாபனத்தின் நிர்வாக தலைவராகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் உள்ளார்.

கடந்த வருட பட்டியலில் இருந்து 2 இடங்கள் பின்தள்ளப்பட்ட இவர் 93 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை கொண்டுள்ளார்.

8. இலாரி பேஜ் (Larry Page)

இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஆவார். அத்துடன் இவர் ஒரு கணனி விஞ்ஞானி, இணைய தொழிலதிபர் ஆவார்.

மேலும் நாம் அனைவரும் அறிந்த கூகுல் (Google) நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரும் ஆவார்.

இவரின் சொத்து மதிப்பு 91.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.




9. செர்ஜி ப்ரின் (Sergey Brin)

இவர் ஒரு தொழிலதிபர், கணனி விஞ்ஞானி, இணைய தொழிலதிபர் ஆவார். இவர் இலாரி பேஜ் அவர்களுடன் இணைந்து கூகுல் நிறுவனத்தை நிறுவினார்.

89 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்கு இவர் உரிமையுடையவர் ஆவார்.

10. முகேஷ் அம்பானி (Mukesh Ambani)

இந்தியாவை சேர்ந்த இவர் ஆசியாவிலேயே முதலிடத்தில் உள்ள பணக்காரர் ஆவார். மேலும், இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (Reliance Industries) தலைவரும் நிருவாக இயக்குநரும் ஆவார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 ஆம் இடத்திற்கு முன்னேரியுள்ள இவரின் மொத்த சொத்து மதிப்பு 84.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ganeshan Karthik

Hi, I am Karthik. I like to design websites. This is my news article website. Latest posts will be updated as soon as possible.

2 thoughts on “உலக பணக்காரர்கள் பட்டியல் 2021

  1. இலங்கையர்கள் எவரது பெயரும் இல்லையே? உள்நாட்டு யுத்தத்தின் பின் கைப்பற்றிய தங்க அணிகள், பணக்கட்டுகள், புதையல்கள் மற்றும் நாட்டை கூறு போட்டு விற்ற பணம் எல்லாம் எங்கே?
    குறைந்தது அந்த 2755 பேர்களின் பட்டியலில் 10 இலங்கையர்களாவது இருந்தாக வேண்டும்.

    1. அதற்கு கைப்பற்றியவர்கள் தான் சரியான பதிலை சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *