Oppo Find X5 Pro – Full Smartphone Features

Oppo Find X5 Pro

மிகவும் ஆற்றல் மிக்க சிறந்த ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ஒப்போ (Oppo) நிறுவனம். ஆம்! கெமரா, சிப்செட், மின்கலம் என்று அனைத்து விடயங்களிலும் மிக முதன்மையான பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போன் தான் Oppo Find X5 Pro ஆகும்.

இனி, அந்த போனின் சிறப்பு பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் திரையின் சிறப்பு பற்றி பார்ப்போம். இந்த ஸ்மார்ட்போனிற்கு AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது. இது 1.07 பில்லியன் வர்ணங்களை காட்சிபடுத்தக்கூடிய சிறப்பான திரை இந்த ஸ்மார்ட்போனிற்கு பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இது 120Hz புதுப்பிப்பு விகிதத்தை கொண்டுள்ளதோடு 240Hz அதிகபட்சமான தொடு மாதிரி விகிதத்தை கொண்டிருக்கிறது.

ஆகவே, போனின் தொடு திரையின் இயக்கம் மிக மிருதுவாகவும் வேகமாகவும் இருக்கும். நீங்கள் ஸ்க்ரோல் (Scroll) செய்யும் போதும், மொபைல் விளையாட்டுக்கள் (Mobile Games) விளையாடும் போதும் இதை இலகுவாக உணரக்கூடியதாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் திரைக்கு இன்னொரு சிறப்பம்சம் உண்டு. அது என்னவென்றால், அதன் பாதுகாப்புக்காக கோர்னிங் கொரில்லா கண்ணாடி விக்டஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உலகில் உள்ள முதன்மையான கண்ணாடி இதுவாகும்.

ஆகவே, திரையின் பாதுக்காப்பை பற்றி ஒரு போதும் கவலைப்பட தேவையில்லை.

இந்த ஸ்மார்ட்போனில் உலகின் முதல் தர சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்! இதற்கு ஸ்னாப்ட்ராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட் பொருத்தியுள்ளார்கள். இது மிகவும் ஆற்றல் மிக்க சிப்செட் ஆகும்.

பல ஆப்களை (App) ஒன்றாக திறந்து வேலை செய்தாலும் அல்லது கனமான வேலைகளை செய்தாலும் இதன் வேகம் குறையாமல் இருக்கும்.

அத்துடன், அட்ரெனா 730 என்ற வரைகலை செயலாக்க அலகும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ரொய்ட் 12 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 12.1 இயங்கு தளத்தில் இந்த போன் இயங்குகிறது.

இதன் அடித்தளத்தை பற்றி கவனித்து பார்த்தால், அனைத்துமே மிக சிறந்த அம்சங்களாக உள்ளது.

இதன் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், அது கெமரா தான். இந்த ஸ்மார்ட்போன் பின் பக்கத்தில் 3 கெமராக்களை கொண்டிருக்கிறது.

பிரதான கெமராவாக 50MP கெமராவும் அல்ட்ராவைட் கெமராவாக இன்னுமொரு 50MP கெமராவும் டெலிஃபோட்டோ கெமராவாக 13MP கெமராவும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றன.

இந்த இரண்டு 50MP கெமராக்களில் உள்ள சிறப்பம்சம் என்னவென்று பார்த்தால், இரண்டிலுமே சோனி IMX 766 சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், டெலிஃபோட்டோ கெமராவின் மூலம் 5 மடங்கு ஹைபிரிட் சூம்மும் (Hybrid Zoom) 20 மடங்கு டிஜிட்டல் சூம்மும் (Digital Zoom) பண்ணக்கூடியதாக உள்ளது.

ஆகவே, இந்த கெமராக்களின் மூலம் மிக தெளிவான, முழுமையான விபரங்களுடன் கூடிய புகைப்படங்களை பெற முடியும்.

அத்தோடு, மிக குறைவாக வெளிச்சம் உள்ள இடங்களிலும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற முடியும்.

இந்த போனின் முன் பக்கத்தில் 32MP கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 8GB, 12GB ரேம் தெரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 256GB, 512GB சேமிப்பகங்களிலும் பெற முடியும்.

5000mAh அளவுள்ள மின்கலம் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 12 நிமிடத்தில் 50% மின்னூட்டக்கூடிய விரைவாக மின்னூட்டும் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது அனைத்து விதமான முதன்மையான சிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

Oppo Find X5 Pro
Oppo Find X5 Pro

 

Oppo Find X5 Pro இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை LTPO AMOLED, 1 Billion Color
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz
நிட்ஸ் (Nits) 1300 Maximum
அளவு 6.7 inches
பிரிதிறன் (Resolution) 1440×3216 Pixels 20:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 525ppi
பாதுகாப்பு Corning Gorilla Glass Victus

 

Oppo Find X5 Pro இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 163.7mm (6.44 inches)
அகலம் 73.9mm (2.90 inches)
உயரம் 8.5mm (0.33 inch)
நிறை 218g
கட்டுமானப் பொருள் Front – Corning Gorilla Glass Victus, Frame – Aluminum,

Back – Ceramic or Eco Leather

பாதுகாப்பு IP68 Dust/Water Resistant (Up to 1.5 meters for 30 minutes)

 

தளம்

இயக்க முறைமை (Operating System) ColorOS 12.1 Based on Android 12
சிப்செட் (Chipset) Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4nm) – Global
MediaTek Dimensity 9000 (4nm) – China
செயலி (Processor) Octa-core (1×3.00GHz Cortex-X2 & 3×2.50GHz Cortex-A710 &

4×1.80GHz Cortex-A510) – Global

Octa-core (1×3.05GHz Cortex-X2 & 3×2.85GHz Cortex-A710 &

4×1.80GHz Cortex-A510) – China

வரைகலை செயலாக்க அலகு (GPU) Adreno 730 – Global
Mali-G710 MC10 – China

 

பின் பக்க கெமரா

கெமரா 50MP, f/1.7, 25mm (Wide), 1/1.56”, 1.0µm, All-Pixel

Omni – Directional Phase Detection Autofocus, SLR-Level

5 – Axis Stabilization, Sony IMX 766 Sensor

50MP, f/2.2, 15mm, 1100 (Ultrawide), 1/1.56”, 1.0µm, All – Pixel

Omni – Directional Phase Detection Autofocus,

13MP, f/2.2, 52mm (Telephoto), 1/3.4”, 5x Hybrid Optical

Zoom, 20x Digital Zoom

சிறப்பம்சங்கள் Hasselblad Color Calibration, LED Flash, HDR, Panorama
வீடியோ 4K – 30/60fps, 1080p – 30/60/240fps, Gyro Electronic Image

Stabilization, HDR, 10 – bit Video

 

முன் பக்க கெமரா

கெமரா 32MP, f/2.4, 21mm (Wide), 1/2.74”, 0.8µm
சிறப்பம்சங்கள் Panorama
வீடியோ 1080p – 30fps, Gyro Electronic Image Stabilization

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes, Stereo Speakers
3.5mm ஜெக் (Jack) No

 

Oppo Find X5 Pro இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint (Under Display, Optical), Gyroscope, Proximity,

Accelerometer, Compass, Multi-Spectral Sensor, Pedometer

Ambient Light Sensor, Colour Temperature Sensor

 

நினைவகம் (Memory)

ரேம் 8GB, 12GB
சேமிப்பகம் 256GB, 512GB
Universal Flash Storage 3.1
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) No

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 5000mAh, non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 80W, 50% in just 12 minutes
Fast wireless charging 50W, 100% in 47 minutes
Reverse wireless charging 10W
USB Power Delivery

 

வலையமைப்பு

தொழினுட்பம் GSM/CDMA/HSPA/CDMA2000/LTE/5G
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
CDMA 800
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 800/850/900/1700(AWS) 1900/2100
CDMA2000 1x
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 17, 18, 19, 20, 25, 26, 28, 32, 34, 38, 39,

40, 41, 42, 66 – Global

1, 2, 3, 4, 5, 7, 8, 12, 17, 18, 19, 20, 26, 28, 34, 38, 39, 40, 41,

66 – China

5ஜி பேண்ட்கள் (5G Bands) 1, 2, 3, 5, 7, 8, 12, 13, 18, 20, 25, 26, 28, 38, 40, 41, 66, 77, 78,

79 SA/NSA – Global

1, 2, 3, 5, 8, 20, 28, 38, 41, 66, 77, 78, 79 SA/NSA – China
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A, 5G

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 a/b/g/n/ac/6e, Dual-band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.2, A2DP, LE, aptX HD
ஜிபிஎஸ் (GPS) GPS, Dual-band A-GPS, Galileo, GLONASS, QZSS, BeiDou
என்எஃப்சி (NFC) Yes
யூஎஸ்பி (USB) USB Type-C 3.1, USB On-The-Go

 

Oppo Find X5 Pro இன் பொதுவான அம்சங்கள்

Sim Dual Sim (Nano-Sim, eSim, Dual-stand by )
Colors Ceramic White, Ceramic Black, Blue
வானொலி (Radio) No

 

Oppo Find X5 Pro இன் வெளியீடு

அறிவித்த திகதி 24 February 2022
வெளியான திகதி 14 March 2022

 

இதையும் வாசிக்க: 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top