New Smart Tamil Logo with Stroke

கணனியை கண்டுபிடித்தவர் யார்? | Who invented the Computer in Tamil?

Who invented the Computer in Tamil

கணனி (Compute in Tamil) என்பது தற்போதைய காலத்தில் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. காரணம், இன்று உலகமே கணனிமயமாகிவிட்டது. உண்மையிலேயே, நமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கக்கூடிய ஒரு சிறந்த கருவி கணனியாகும்.

இவ்வளவு சிறப்புமிக்க கணனியை கண்டுபிடித்தவர் யார் (Who invented the computer in Tamil) என்று உங்களுக்கு தெரியுமா? சரி,  வாருங்கள் இனி கணனியை கண்டுபிடித்தவர் பற்றி விரவாகப்பார்க்கலாம்.

கணனியை கண்டுபிடித்தவர் யார் என்றால் சார்லஸ் பாபேஜ் என்ற பல்துறை மேதையே கணனியை கண்டுபிடித்தவர் ஆவார்.

சார்லஸ் பாபேஜ் (Charles Babbage in Tamil) ஒரு கணித மேதை, முதலீட்டாளர், தத்துவஞானி மற்றும் இயந்திர பொறியியலாளர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை – Who invented the Computer in Tamil

சார்லஸ் பாபேஜ் 1791 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி லண்டனில் பிறந்தார்.

இவரின் தந்தையின் பெயர் பெஞ்சமின் பாபேஜ் (Benjamin Babbage in Tamil) ஆகும் இவரின் தந்தை ஒரு வங்கியாளர் ஆவார். சார்லஸ் அவர்களின் தாயாரின் பெயர் பெட்ஸி பிளம்லீக் டீப் (Betsy Plumleigh Teape in Tamil) ஆகும்.

கணனியின் கண்டுபிடிப்பு – Who invented the Computer in Tamil

வேறுபாடு இயந்திரம் (Difference Engine)

Who invented the Computer in Tamil
Difference Engine

சார்லஸ் அவர்கள் 1822 ஆம் ஆண்டு வேறுபாடு இயந்திரம் (Difference Engine in Tamil) என்று அழைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை உருவாக்க ஆரம்பித்தார்.

இந்த இயந்திரமானது தானாகவே பெறுமானங்களின் தொடரை கணிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதாவது, பல்லுறுப்புக் கோவைகளை அட்டவணைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திர கணிப்பானாகும்.

இதுவே முதலாவது இயந்திர கணனியாகும்.

எனினும், நிதி பற்றாக்குறை காரணமாக பாபேஜ் அவர்களால் அவ்வியந்திரத்தை முழுமையாக செய்து முடிக்க முடியாமல் போனது.

இருந்தபோதிலும், 19991 ஆம் ஆண்டு லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தினால் (Science Museum, London in Tamil) சார்லஸ் பாபேஜ் அவர்களின் திட்டத்தை பயன்படுத்தி அவ்வியந்திரம் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பகுப்பாய்வு இயந்திரம் (Analytical Engine)

Who invented the Computer in Tamil
Analytical Engine

வேறுபாடு இயந்திரம் உருவாக்கும் காலகட்டத்தில், ஒரு பொதுவான வடிவமைப்பான பகுப்பாய்வு இயந்திரத்தின் (Analytical Engine in Tamil) சாத்தியத்தை உணர்ந்தார் பாபேஜ் அவர்கள்.

பகுப்பாய்வு இயந்திரத்தின் வடிவமைப்புக்கான பணிகள் 1833 ஆம் ஆண்டு ஆரம்பமானது.

இது ஒரு முன்மொழியப்பட்ட இயந்திர பொது நோக்க கணனியாகும். இவ்வியந்திரமானது எண்கணித தர்க்க அலகு (Arithmetic Logic Unit), கட்டுப்பாடு ஒழுக்கு (Control Flow) மற்றும் ஒருங்கிணைந்த நினைவகம் (Integrated Memory) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த இயந்திரமும் நிதியின்மை காரணமாக பாபேஜினால் முழுமையாக செய்து முடிக்க முடியாமல் போனது.

பகுப்பாய்வு இயந்திரமானது 1837 ஆம் ஆண்டு முதன் முதலாக பாபேஜ் அவர்களால் முன்மொழியப்பட்டது. தற்போதைய நவீன கணனியின் அனைத்து அத்தியாவசிய அம்சங்களும் இந்த இயந்திரத்தில் காணப்படுகின்றன.

பாபேஜ் அவர்கள் இதன் மூலமாக நிரல்படுத்தக்கூடிய டிஜிட்டல்  கணனிக்கான (Digital Programmable Computer) வடிவ கோட்பாட்டை (Concept) தோற்றுவித்தார்.

இதனால் இவர் கணனியின் தந்தை (Father of the Computer) என அழைக்கப்படுகிறார்.

சார்லஸ் பாபேஜ் அவர்களின் இந்த கண்டுபிடிப்புகளின் காரணமாகவே நாம் தற்போது கணனியை பயன்படுத்திக்கொண்டிடுக்கிறோம். அதனாலேயே இவ்வுலகம் எல்லா துறைகளிலும் கணனிமயமாகியுள்ளது.

பாபேஜ் அவர்களின் கண்டுபிடிப்பு உலக முன்னேற்றத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.

இதையும் வாசியுங்கள்:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top