New Smart Tamil Logo with Stroke

Xiaomi Redmi Note 11 Pro – Full Smartphone Features

Xiaomi Redmi Note 11 Pro

ஷியோமி (Xiaomi) நோட் (Note) தொடரில் தனது புதிய Xiaomi Redmi Note 11 Pro இனை வெளியிட்டுள்ளது. அழகான தோற்றத்தினை கொண்ட இந்த போனானது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

முதலில் இதன் அருமையான திரையை பற்றி பார்க்கலாம். அருமையான என்று சொல்லக் காரணம் அதன் புதுப்பிப்பு விகிதம் தான். ஆம்! 120Hz இனை கொண்ட சிறந்த AMOLED திரை வழங்கப்பட்டுள்ளது.

இதன் நிட்ஸ் 700 இலிருந்து அதிகபட்சமாக 1200 வரை உள்ளது. ஆகவே சூரிய ஒளி நிறைந்த இடத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அதன் பாதுகாப்புக்காக திரைக்கு கோர்னிங் கொரில்லா கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, திரை பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ரொய்ட் 11 எனும் இயக்க முறைமையில் இயங்குகிறது. அத்துடன், எம்ஐயூஐ 13 என்கிற பயனர் இடைமுகத்தை கொண்டிருப்பதால் நீங்கள் விரும்பிய வகையில் போனின் திரை அம்சங்களை மாற்றி அமைக்கமுடியும்.

இதில் மீடியாடெக் ஹேலியோ G96 என்கிற சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. கனமான வேலைகளுக்கு அன்றி தினசரி பயன்பாட்டுக்கு இந்த போன் உறுதுணையாக இருக்கும்.

இந்த போனின் பின் பக்கத்தில் 4 கெமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதான கெமரா 108MP இனை கொண்டுள்ளது.

அதேபோல, மற்ற கெமராக்களை பற்றி பார்த்தால், 8MP கொண்ட அல்ட்ராவைட் கெமரா, 2MP உடைய மெக்ரோ கெமரா, 2MP உடன் டெப்த் கெமரா ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

இந்த 108MP கெமராவின் மூலம் படிக தெளிவான புகைப்படங்களை உங்களால் பெறமுடியும்.

முன் பக்க கெமராவாக 16MP இனை உடைய கெமரா வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு 1080 பிக்செல் தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யமுடியும். அதன் புகைப்படங்களும் நன்றாக இருக்கும்.

6GB, 8GB ஆகிய ரேம்களில் வெளியாகும் இந்த போன் 64GB, 128GB சேமிப்பகங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இனி, இறுதியாக மின்கலத்தின் விபரங்களை பார்ப்போம். இதற்கு 5000mAh இனை கொண்ட கலற்ற முடியாத மின்கலம் பொருத்தப்பட்டுள்ளது. 67W என்ற அதி கூடிய மின்னூட்டல் வசதியும் கொண்டிருக்கிறது.

15 நிமிடத்தில் 51% மின்னூட்டக்கூடய முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகமாக போனில் வேலை செய்வோர்க்கு, சூம் (Zoom) மூலம் படிப்போருக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக பொருத்தமாக இருக்கும்.

Xiaomi Redmi Note 11 Pro
Xiaomi Redmi Note 11 Pro

 

Xiaomi Redmi Note 11 Pro இன் முழு விபரங்கள்

திரை (Display)

வகை Super AMOLED, HDR10
புதுப்பிப்பு விகிதம் (Refresh Rates) 120Hz
நிட்ஸ் (Nits) 700 nits, 1200 (Maximum)
அளவு 6.67 inches, 107.4cm2
பிரிதிறன் (Resolution) 1080×2400 Pixels, 20:9 Ratio
பிக்ஸல் அடர்த்தி (Pixel Density) 395ppi
பாதுகாப்பு Corning Gorilla Glass 5

 

Xiaomi Redmi Note 11 Pro இன் அமைப்பு விபரங்கள்

நீளம் 164.2mm (6.46 inches)
அகலம் 76.1mm (3.00 inches)
உயரம் 8.1mm (0.32 inches)
நிறை 202g
கட்டுமானப் பொருள் Front – Corning Gorilla Glass 5, Back – Glass
பாதுகாப்பு IP53, Dust and splash protection

 

தளம்

இயக்க முறைமை (Operating System) Android 11,
பயனர் இடைமுகம் (User Interface) MIUI 13
சிப்செட் (Chipset) Mediatek Helio G96 (12nm)
செயலி (Processor) Octa-core (2v2.05GHz Cortex-A76 & 6×2.0GHz Cortex-A55)
வரைகலை செயலாக்க அலகு (GPU) Mali-G57 MC2

 

பின் பக்க கெமரா

கெமரா 108MP, f/1.9, 26mm (Wide), 1/1.52”, 0.7µm
8MP, f/2.2, 1180 (Ultrawide)
2MP, f/2.4 (Macro)
2MP, f/2.4 (Depth)
சிறப்பம்சங்கள் LED Flash, HDR, Panorama
வீடியோ 1080p – 30fps

 

முன் பக்க கெமரா

கெமரா 16MP, f/2.4 (Wide)
வீடியோ 1080p – 30fps

 

ஒலி (Sound)

ஒலிபரப்பி (Loudspeaker) Yes, with stereo speakers
3.5mm ஜெக் (Jack) Yes
விபரம் 24-bit – 192kHz Audio

 

Xiaomi Redmi Note 11 Pro இன் சிறப்பம்சங்கள்

உணரிகள் (Sensors) Fingerprint, Gyroscope, Accelerometer, Proximity, Compass,
Ambient Light, IR Blaster

 

நினைவகம் (Memory)

ரேம் 6GB, 8GB
சேமிப்பகம் 64GB, 128GB
வெளிப்புற சேமிப்பகம் (External Chip) MicroSDXC, up to 1TB

 

மின்கலம் (Battery)

வகை Li-Po 5000mAh, Non-removable
மின்னூட்டம் (Charge) Fast charging 67W
Power Delivery 3.0
Quick Charge 3+

 

வலையமைப்பு

தொழிநுட்பம் GSM/HSPA/LTE
2ஜி பேண்ட்கள் (2G Bands) GSM 850/900/1800/1900 – Sim 1 & Sim 2
3ஜி பேண்ட்கள் (3G Bands) HSDPA 850/900/1700(AWS) 1900/2100
4ஜி பேண்ட்கள் (4G Bands) 1, 2, 3, 4, 5, 7, 8, 12, 13, 17, 20, 26, 28, 32, 38, 40, 41, 66
வேகம் HSPA 42.2/5.76Mbps, LTE-A (CA)

 

இணைப்புகள்

வைஃபை (Wi-Fi) Wi-Fi 802.11 b/g/n/ac, Dual-band, Wi-Fi Direct, Hotspot
புளூடூத் (Bluetooth) 5.1, A2DP, LE
ஜிபிஎஸ் (GPS) GPS L1, GLONASS G1, BDS B1, GALILEO E1
என்எஃப்சி (NFC) Yes (Depend on market/region)
யூஎஸ்பி (USB) USB Type-C, 2.0, USB On-The-Go

 

Xiaomi Redmi Note 11 Pro இன் பொதுவான அம்சங்கள்

Sim Hybrid Dual Sim (Nano Sim, Dual Stand-by)
Colors Graphite Gray, Polar White, Star Blue
வானொலி (Radio) குறிப்பிடப்படவில்லை

 

Xiaomi Redmi Note 11 Pro இன் வெளியீடு

அறிவித்த திகதி 26 January 2022
வெளியான திகதி 18 February 2022

 

இதையும் வாசிக்க:

 

 

இந்த கட்டுரையை மற்றவர்களுக்கும் பகிரவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top