பொதுவாக நிலம் என்று சொல்வது பூமியின் மேற்பரப்பரப்பாகும். பூமி இல்லையென்றால், உயிர்களும் உயிரற்ற பொருள்களும் படைக்கப்பட்டிருக்க மாட்டாது என்று தான் சொல்ல வேண்டும்.
மனிதன் உட்பட அனைத்தையும் சுமப்பது இந்த நிலமே. நிலத்தை அடிப்படையாக வைத்தே எல்லா உயிர்களும் தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி, பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் நிலத்திலேயே தனது வாழ்க்கையும் முடிக்கின்றது.
சரி இனி நிலம் என்றால் என்ன (What is the land in Tamil) என்று சற்று விளக்கமாக பார்க்கலாம் வாருங்கள்.
நிலம் என்றால் என்ன? (What is the land in Tamil?)
நிலம் என்பது முழுமையாகவும் நிரந்தரமாகவும் நீரில் மூழ்கியிராத பூமியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.
இந்நிலத்தினை ஆதாரமாகக் கொண்டே இயற்கை வளங்கள், மனித மற்றும் ஏனைய உயிரின வாழ்விடம், விவசாயச் செயற்பாடுகள், மனித அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பன அமைந்துள்ளன எனக் குறிப்பிடலாம்.
நிலத்தின் மேல் பாறைகள், மலைத்தொடர்கள், நீர் நிலைகள், மண், பனிமலை, பாலைவனம் என்பன காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
நிலம் (Nilam in Tamil) என்று சொல்லப்படுவது நீர் நிலைப் போல இயங்காது ஒரேயிடத்தில் நிரந்தரமாக நிலையாக நிற்கக் கூடியது. இது ஐம்பூதங்களுள் ஒன்றாக கருதப்படுவது நினைவு கூறத்தக்கது.
நிலத்தின் இயல்புகள்
- மனிதனால் உருவாக்க முடியாத, உருவாக்கப் படாத ஒரு இயற்கை வளமாகும்.
- அசையும் தன்மை அற்றது. அதாவது, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும் இயல்பு அற்றது.
- செயற்படாத பண்பை கொண்டது. அதாவது, மனித மற்றும் ஏனைய காரணிகளின் முயற்சியினால் செயற்படக் கூடியது.
- உற்பத்திக்கு என்று ஒரு செலவையும் கொள்ளாது சிறந்த வருவாயைத் தரவல்லது.
- பெறுமதி பெற்றது.
நிலத்தில் காணப்படும் மண் வகைகள்
மண் வகையினை 5 வகையாகப் பிரித்து நோக்கலாம்.
1. வண்டல் மண்
இம்மண்ணானது மிக மெல்லிய துகள்களால் உருவானது. ஆற்றின் படிதல் செயற்பாட்டால் உருவான வளமான மண் இனம் ஆகும். இம்மண்ணில் நெற்செய்கை, வாழைச் செய்கை, கரும்பு, பயறு, சோளம் போன்றவற்றை விளையச் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. கரிசல் மண்
எரிமலை வெடிப்பின் போது வெளியாகும் லாவாக் குழம்பானது பூமியில் படிதலால் உருவாகும் மண் வகை இதுவாகும். இதில் பருத்தி, கிழங்கு, கரும்பு போன்ற செய்கைகளை மேற்கொள்ள முடியும்.
3. செம்மண்
இம்மண்ணானது பொதுவாக செந்நிறமாக இருப்பதால் செம்மண் எனப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது,. இதில் கெரட், பீட்ரூட் போன்றவற்றைப் பயிரிடலாம்.
4. பாலை மண்
இது மணற்பாங்கான பிரதேசமாகும். சுற்றிலும் வெறுமனே மணல் மட்டுமே காணப்படும். அதிக வெப்பத்தை கொண்ட நிலமாக இருக்கும். மேலும், கடற்கரை ஒட்டிய பிரதேசங்களில் இம்மண் பரவலாக காணப்படும். உப்பு தயாரிப்பு, கருவாடு உலர்த்தல் போன்ற தொழிற்துறைகளை இம்மண்ணில் மேற்கொள்வர்.
5. துருக்கல் மண் அல்லது சரளை மண்
இம்மண்ணானது பாறைகள் சிதைந்து உருவாகும் பரல்களால் ஆனது. இது மலைப்பாங்கான பிரதேசங்களில் காணப்படும். சோளம், தினை, கம்பு போன்றவற்றை பயிர்ச் செய்கை செய்யக் கூடிய மண் வகையாகக் காணப்படும்.
நிலத்தின் பயன்கள்

விவசாய நடவடிக்கைகளுக்கு மூலாதாரமாக விளங்குதல்
நெல், சோளம், கோதுமை, தினை போன்ற தானிய வேளாண்மைக்கும் தென்னை, வாழை, கரும்பு, பருத்தி போன்ற ஏனைய அனைத்து விவசாய உற்பத்திகளுக்கும் நிலம் அடித்தளமாக விளங்குகின்றது.
விவசாயப் பயிர்கள் மட்டுமன்றி, மருத்துவ தாவரங்களின் உற்பத்தி, அழகுக்கு வளர்க்கும் பூச்செடிகள், தோட்டங்களின் செய்கைகள், மரம், செடி, கொடி என சகல விதமான வளர்ப்புச் செயற்பாடுகளுக்கும் மூலமாக விளங்குவது நிலமே ஆகும்.
கனிய வளங்கை வழங்குதல்
இந்நிலத்தில் ஏராளமான வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பணத்தை அள்ளித்தரும் எண்ணற்ற கனிய வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது நிலம்.
இரத்தினக்கற்கள், களிமண், சுண்ணாம்புக்கல், காரீயம், இல்மனைட், சிலிக்கன், கனிய மணல் வகைகள், இரும்புத்தாது போன்ற இன்னோரன்ன வளங்கள் நிலத்தின் அகத்தே காணப்படுவதனைக் குறிப்பிடலாம்.
நீர் வளத்தையும், நிலத்தடி சிற்றுயிர்களையும் பாதுகாத்தல்
நிலம் வளமாகக் காணப்பட்டால் மாத்திரமே நீர் வளத்தை தக்கவைக்க இயலும். குளம், கிணறு போன்ற நிலத்தடி நீரினைப் பெறவும், சில பக்டீரியாக்கள், கறையான், மண்புழு போன்ற உயிரினங்களின் வாழ்க்கைக்கும் நிலம் முக்கியமானது.
காட்டு வளத்தினைப் பாதுகாப்பதற்கு துணையாக இருத்தல்
காற்று மற்றும் மழைவீழ்ச்சியினைப் பெற காடுகளானது அடித்தளமாக திகழ்கின்றன. இக்காடுகளை வளமாகவும் நிலையாகவும் வளர்ப்பதற்கும் வைத்திருப்பதற்கும் நிலம் பாரிய பங்கினை வகிக்கின்றது.
இதையும் வாசிக்க:
குடியிருப்புக்கள் மற்றும் கட்டிடங்களின் நிர்மாணத் துறைக்கு அத்தியாவசியமானதாக விளங்குதல்
இன்றைய சனத்தொகை வளர்ச்சி வேகத்திற்கேற்ப குடியிருப்புகளின் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இதற்கமைய நாளுக்கு நாள் குடியிருப்புகளின் நிர்மாணமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றமையும் நோக்கத்தக்கது.
இதனால், நிலையான மற்றும் பாதுகாப்பான குடியிருப்புகளை அமைப்பதற்கு நிலமானது பாரிய பங்கினை வகிக்கிறது.
அத்துடன், உலக அபிவிருத்திக்கமைய கட்டிடங்களின் நிர்மாணத் துறையும் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இவ்வளர்ச்சிக்கமைய முறையான மற்றும் நிரந்தரமானதும் தரமானதுமான கட்டிடங்கள் உருவாக நிலம் (Nilam in Tamil) மாபெரும் உறுதுணையாக இருக்கிறது.
இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் நிலத்தின் சதவீதமானது குறைந்துக் கொண்டே வருகிறது.
அதுமட்டுமன்றி, நில மாசடைவு, நிலத்தின் இயற்கை தன்மை மற்றும் இயல்பு கெட்டுப் போதல் போன்ற விளைவுகளும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பாதகங்களை தடுப்பதன் மூலம், தவிர்ப்பதன் மூலமும் நிலத்தை பாதுகாக்க முடியும்.
குறிப்பாக தற்போது நிலம், நீர், காற்று போன்ற இன்றியமையாத உயிரிகளின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான இயற்கை வளங்கள் மாசவதை நாம் அனைவராலும் நன்கு அறிய முடிகிறது.
இவற்றை பாதுகாப்பதற்கான ஒரேவொரு சிறந்த வழி மரங்களை வளர்ப்பது மட்டுமேயாகும். ஆகவே, மரங்களை வளர்ப்போம்; இயற்கையை பாதுகாப்போம்.
நிலம் என்றால் என்ன (What is the land in Tamil) என்று அறிந்த நாம் இப்பொழுது மட்டுமல்லாது, எதிர்கால சந்ததியினர் எப்பொழுதும் நன்மை பெறத் தக்கவாறு நிலத்தை காப்பது எம்மனைவரினதும் தலையாய கடமையாகும்.
மேலும் சில பயனுள்ள தகவல்கள்:

Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. Also, I design professional websites for business, blog, portfolio, etc. Please visit for more details: Webthik.com