New Smart Tamil

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் | Effects of deforestation in Tamil

Effects of deforestation in Tamil

ஒரு காட்டையோ அல்லது வனத்தையோ அல்லது ஒரு தொடர் மரங்களின் வரிசையையோ வெட்டி வீழ்த்தி வெறும் தரையாக மாற்றுவது காடழிப்பு எனப்படும்.

அன்று முதல் இன்று வரை காடழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் விளைவுகளும் (Effects of deforestation in Tamil) அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனலாம்.

நாளுக்கு நாள் மானிட தேவைகளாலும் செயற்பாடுகளினாலும் காடழிப்பு துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது என்றால் பொய்யில்லை.

காடுகளை அழிப்பதற்கான காரணங்கள் (Causes of deforestation in Tamil)

Effects of deforestation in Tamil
Effects of deforestation in Tamil

இக்காடழிப்பானது மானிட மற்றும் இயற்கைக் காரணிகளால் நிகழ்கின்றன.

சனத்தொகை அதிகரிப்பு, குடியேற்றங்கள் அமைத்தல், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, விலங்குகள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு பன்னைகள் உருவாக்கம், நகரமயமாதல், கடதாசி உற்பத்தி, எரிபொருள் பயன்பாடு, மரம் மற்றும் மரத்துண்டுகள் விற்பனை போன்ற மானிட காரணிகளாலும் காட்டுத் தீ, அதிக வெப்பம் போன்ற இயற்கைக் காரணிகளாலும் காடழிப்பு (Deforestation in Tamil) நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நிமிடத்திற்கு நிமிடம் சனத்தொகை பெருக்கமானது கூடிக்கொண்டே செல்கின்றது. அவர்களின் தேவைகளும் எண்ணற்றதாக மாறிக் கொண்டே போகின்றது.

இதனால், காடுகளின் அழிப்பு துரிதமாக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பினால் அவர்களது தேவைகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

குடியிருப்புக்கள் அமைத்தல், உணவுத்தேவை, தொழிற் தேவை போன்றன அதிகரித்த வண்ணமே இருக்கிறன.

இத்தேவைகளை பூர்த்து செய்வதற்கு கணக்கு வழக்கின்றி மரங்கள் வெட்டப்படுகின்றன.

மேலும், வீடுகளை அமைத்துக்கொள்ளவும் இட வசதியினை பெற்றுக் கொள்வதற்கும் கட்டுமாணத்தை மேற்கொள்ள தடிகள், பலகைகள் பெறுவதற்கும் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

உயிர் வாழ்வதற்கு தொழில் தேவை என்பதால் விறகு விற்பனை, கால்நடை வளர்ப்பு, பெருந்தோட்டப் பயிர்செய்கை உட்பட விவசாயம் மேற்கொள்ளல், மரத்துண்டுகள் விற்பனை போன்ற உழைப்பிற்காகவும் காட்டு வளம் பெரும் வாரியாக அழிக்கப்படுகின்றன.

அத்துடன், நகரமயமாதல் காடழிப்பிற்கு முக்கிய ஏதுவாக இருக்கின்றது எனலாம். அடுக்குமாடிகளின் நிர்மானம், பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மானம், கடைத்தொகுதிகளின் நிர்மானப்பணிகள் போன்ற இன்னோரன்ன பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஒரு வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மரங்கள் உலகமெங்கும்  அழிக்கப்படுகின்றன.

மேலும், புத்தகங்கள், செய்தித் தாள்கள், கொப்பிகள் போன்ற கடதாசி உற்பத்திக்காகவும் குறிப்பிட்டளவு மரங்கள் வெட்டி ஒழிக்கப்படுகின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் இலத்திரனீயல் சாதனங்கள் என்னதான் பெருகினாலும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கம், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இன்னும் மாறவில்லை.

இதனால், கடதாசிகளை தயார் செய்யும் தேவையும் இருப்பதனால் மரங்கள் அழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மானிட தேவைகள் பலவற்றிற்காக காடுகள் வரையறை இன்றி அழிக்கப்படுகின்றமை எடுத்துக் காட்ட வல்லது.

காடழிப்பின் விளைவுகள் (Effects of deforestation in Tamil)

Effects of deforestation in Tamil

காடழிப்பால் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் வெகுவாக தங்க வைத்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாயுவானது வளிமண்டத்தில் அதிகளவு சேர்ந்து படலங்களாக தங்கி விடுகின்றன.

இதனால், புவியில் சூரியக் கதிர் வீச்சுக்கள் தங்க  வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக சூரியக் கதிர்கள் வெப்பமாக மாறும்.

இதன் விளைவாக புவியின் வெப்பம் அதிகரிப்புக்கு உட்படும். இதையே பச்சை வீட்டு விளைவு என்பர்.

புவியின் வெப்பம் அதிகரிப்பதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீர் வீழ்ச்சி குறைவடைந்து மழை வளம் குன்றும். நீர் நிலைகள் வற்றி வறண்டு போகும். நிலங்கள் வெடித்து வறட்சி ஏற்படும். இவ்வாறான பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீர் வளம் குன்றுதலால் விவசாய மற்றும் ஏனைய பயிர்செய்கை உற்பத்திக்கள் பாதிக்கப்படும். இதனால், மக்களுக்கு தேவையான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் உலகமே பஞ்சத்தை நோக்கிச் செல்லும்.

அதுமட்டுமன்றி, காடழிப்பால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். தரைக்கீழ் நீர் அற்றுப் போகும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றி வறண்டு விடும்.

இதையும் வாசிக்க:

இதன் விளைவாக மனிதன் மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படும். இவ்வாறு புவி வெப்பமேறல் விளைவுகளை  ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

விவசாய நிலங்களை தயார் செய்வதற்காக காடுகளை தீ வைத்து அழித்து மண்ணுக்கு இரசாயண உரம் போடுவதால், மண்ணிலுள்ள சிற்றுயிர்கள் அழியும்; மண்ணின் இயற்கை வளம் குன்றும்.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மண் தரமற்றதாக மாறி பயிர்ச்செய்கைக்கு பொருத்தமற்றதாக மாறி விடுகின்றமை எடுத்துக் காட்ட வல்லது. இதன்போது, காடுகளும் அழிக்கப்பட்டு மண்ணும் மாசுபடுகின்றது.

குறிப்பாக, மண்ணை இறுகிப் பற்றிப் பிடிக்க மரங்கள் இல்லாமல் போயின், மண்சரிவு வெகுவாக ஏற்படும். ஏனென்றால், மரத்தின் வேர்களே மண்ணை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருக்கின்றன.

அத்தகைய மரங்கள் இல்லையேல் மண் இலகுவாக சிறிய மழைக்கும் கரைந்து செல்லும். இது இவ்வாறு நீடிக்கும் பட்சத்தில் பாரிய அளவில் மண்சரிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மழை இல்லாத நேரங்களில் கூட சில இடங்களில் மண்சரிவு ஏற்படுவதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதற்கு இதுவே காரணமாகும்.

இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், காடுகளில் மனித தேவைக்காக தீயை வைப்பதனால் காட்டு விலங்குகள் மற்றும் சிற்றுயிர்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன மற்றும் நிர்க்கதியாகின்றன எனலாம்.

காட்டுத் தீ மணித்தியாலத்திற்கு பல ஏக்கர் நிலப்பரப்பை அழிக்கவல்லது. இதன்போது வெளியாகும் புகையானது அப்பிரதேசத்திலுள்ள குடியிருப்புக்களை பாதிக்கும்.

வளிமண்டலத்தோடு கலந்து வளியை மாசுபடுத்தும். இதனால், சுவாச நோய்கள் மற்றும் கோளாறுகள் ஏற்பட்டு உயிர் ஆபத்து வரை நிகழ நேரிடலாம்.

இதையும் வாசிக்க: 

மேலும், அதிக புகை காரணமாக ஓசோன் படலமும் பாதிப்படையலாம் என்பதும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

அதுமட்டுமல்லாது, காடழிப்பினால் ஏற்படுகின்ற புவி வெப்பமாதலினால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கும்.

சிற்சிறு தீவுகள் கடலில் மூழ்கிப் போகும். ஏனைய தீவுகளின் கரை மட்டம் குறைந்து கடல் பரப்பு அதிகரிக்கும் அபாயமும் நிகழ்கின்றமை நோக்கத்தக்கதொரு விளைவாகும்.

துருவ பகுதிகளில் பனிச்சரிவு, பனிமலை உருகி கடல் மட்டம் பெருகுதலுக்கு இப்புவிவெப்பம் ஏற்றம் மிக முக்கிய காரணமாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அத்துடன், அரியவகை தாவர இனங்கள், மருத்துவ மூலிகைகள் விலைமதிப்பில்லா மரங்கள் அழிந்து போகின்றமைக்கும் உயிர் பல்லினத்தன்மை பாதிப்படைதலுக்கும் இக்காடழிப்பு மிக முக்கிய ஏதுவாக அமைந்துள்ளது.

காடுகள் உலகின் சுவாசம் போன்றது. இத்தகைய சுவாசப்போர்வையை பாதுகாப்பது எம்மவர் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும்.

காடுகள் இருப்பதனாலேயே மழை வீழ்ச்சி, சுத்தமான காற்று, சூழலில் ஈரப்பதன், குளிர்ச்சி போன்றன சமநிலையில் காணப்படுகின்றன.

காடுகள் பாதுகாக்கப்படுவதன் மூலமாகவே பூமியின் சமநிலை தன்னாலேயே காக்கப்படும்.

எதிர்கால சந்ததியினருக்கு இப்புவியை நலமாக ஒப்படைக்க வேண்டுமெனில், தற்காலத்தில் காட்டு வளத்தை கண் போல பாதுகாப்பது எமது கடமையே.

ஆகவே, எமது பாதுகாப்பு அரணான காடுகளை பாதுகாத்து எதிர்கால பரம்பரையை சிறக்கச் செய்வோம்.

மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம் நற்பயனைப் பெறுவோம்.

 

மேலும் சில பயனுள்ள தகவல்கள்: 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top